நவராத்திரி ஆறாம் நாள் ஸ்பெஷல்..! அட்டகாசமான சுவையில் தேங்காய் சாதம் செய்யும் முறை..!
நவராத்திரியின் ஆறாம் நாள் நெய்வேத்தியமான தேங்காய் சாதம் சுவையாக செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை –நவராத்திரியின் ஆறாம் நாள் நெய்வேத்தியமான தேங்காய் சாதம் சுவையாக செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்;
- தேங்காய் எண்ணெய்= நான்கு ஸ்பூன்
- கடுகு உளுந்து= ஒரு ஸ்பூன்
- கடலைப்பருப்பு= ஒரு ஸ்பூன்
- முந்திரி பருப்பு= 10
- பெருங்காயம் =கால் ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்= இரண்டு
- பச்சை மிளகாய்= 2
- கருவேப்பிலை= தேவையான அளவு
- தேங்காய்= அரை மூடி [துருவியது]
செய்முறை;
முதலில் சாதத்தை வடித்து நன்கு ஆற வைத்துக் கொள்ளவும் .பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து ,கடலைப்பருப்பு ஆகியவற்றை தாளித்துக் கொள்ளவும் .பிறகு கருவேப்பிலை ,வரமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து முந்திரிப் பருப்பு அல்லது வேர்கடலை தேவையான அளவு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
இப்போது துருவி வைத்துள்ள தேங்காயையும் சேர்த்து கிளற வேண்டும். ஒரு நிமிடம் கிளறி விட்டு ஆற வைத்துள்ள சாதம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு இறக்கினால் அட்டகாசமான சுவையில் தேங்காய் சாதம் தயாராகிவிடும்.