உங்கள் முடியை சைனிங்க் ஆக மாற்ற இயற்கை கண்டிஷ்னர்கள்!!

Published by
Varathalakshmi

முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையாகவோ அல்லது செயற்க்கையாகவோ பலரும் பல முறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் முடியை சைனிங்க் ஆக வைத்துக்கொள்ள உதவும் 6 இயற்கையான கண்டிஷ்னர்கள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.

1.வாழைப்பழ ஹேர் கண்டிஷனர்:

banana

  • ஒரு வாழைப்பழம், 3 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி பால், 3 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து பேஸ்ட் போல மசித்துகொள்ளவும்.
  • அதை முடிக்கு தடவி 20-30 நிமிடங்கள் அப்படியே விடவும்.
  • பின்னர் குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு தலைமுடியை நன்கு கழுவ வேண்டும்.

2.வினிகர் மற்றும் முட்டை கண்டிஷனர்

  • 2-3 முட்டைகள், வினிகர் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு இரண்டு தேக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் ஒரு தேக்கரண்டி, மற்றும் தேன் ஒரு தேக்கரண்டி போன்றவற்றை பிளெண்டரில் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும்.
  • முடியின் நுனியில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும்.
  • பின்னர், வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் உங்கள் முடியை நன்கு அலசவும்.

3.தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் கண்டிஷனர்

  • தேங்காய் எண்ணெய் 1தேக்கரண்டி, தேன் 1தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 1தேக்கரண்டி, தயிர் 2தேக்கரண்டி, மற்றும் ரோஸ் வாட்டர் 1தேக்கரண்டி கலந்த பேஸ்டை உருவாக்கிக்கொள்ளவும்.
  • அந்த பேஸ்டை தலைமுடியில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே தலையில் வைத்திருக்கவும்.
  • பின்னர், குளிர்ந்த நீரில் முடியை நன்றாக அலச வேண்டும்.

4.யோகர்ட் ஹேர் கண்டிஷனர்

  • ஆறு தேக்கரண்டி தயிர் மற்றும் ஒரு முட்டை நன்றாக அடித்து கொள்ளவும்.
  • இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.
  • உங்கள் தலைமுடியை மென்மையான துண்டு அல்லது துணியால் மூடி வைக்கவும்.
  • குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் முடியை அலசவும்.

5.ஆப்பிள் சைடர் வினிகர் கண்டிஷனர்

  • இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து மென்மையான பேஸ்ட்டாக்கவும்.
  • உங்கள் தலைமுடியில் இதைப் பயன்படுத்துங்கள்.
  • பின்னர், 15-30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முடியை கழுவ வேண்டும்.

6.அலோ வேரா ஹேர் கண்டிஷனர்

  • நான்கு தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து அரைத்துக்கொள்ளவும்.
  • இந்த பேஸ்டை உங்கள் தலைமுடியில் தடவி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
Published by
Varathalakshmi

Recent Posts

அமரன் முடிஞ்சது..”கூலி ஷூட்டிங் போறேன்”!உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை…

4 mins ago

“விஜய் பேச்சை கண்டும் காணாமல் போயிருக்கலாம், ஆனால்.?” திருமாவளவன் விளக்கம்.!

சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக - அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…

7 mins ago

கிடுகிடுவென மீண்டும் உயர்ந்த தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ!!

சென்னை :  தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை…

48 mins ago

சென்னை மெரினாவில் குவிந்த வடமாநிலத்தவர்கள் : இது அவுங்க ஊர் ‘பொங்கல்’ திருவிழா!

சென்னை : தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க பேருதவி புரியும் சூரியனை வணங்கும் விதமாக பொங்கல் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14இல்…

1 hour ago

“தைரியமான மனிதர் டொனால்ட் டிரம்ப்”…புகழ்ந்து பேசி வாழ்த்து தெரிவித்த ரஷ்ய அதிபர் புடின்!

மாஸ்கோ : அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மேற்பட்ட மாகாணங்களில் வெற்றி பெற்று…

1 hour ago

திருச்சி நூலக பணிகள் முதல் …ஜோ பைடன் வாழ்த்து வரை..!

சென்னை : திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை கலைஞர் பெயரால் அமைப்பதற்கான பணிகள் இன்று…

1 hour ago