உங்கள் முடியை சைனிங்க் ஆக மாற்ற இயற்கை கண்டிஷ்னர்கள்!!

முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையாகவோ அல்லது செயற்க்கையாகவோ பலரும் பல முறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையாகவோ அல்லது செயற்க்கையாகவோ பலரும் பல முறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் முடியை சைனிங்க் ஆக வைத்துக்கொள்ள உதவும் 6 இயற்கையான கண்டிஷ்னர்கள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.

1.வாழைப்பழ ஹேர் கண்டிஷனர்:

unknown node

ஒரு வாழைப்பழம், 3 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி பால், 3 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து பேஸ்ட் போல மசித்துகொள்ளவும்.

அதை முடிக்கு தடவி 20-30 நிமிடங்கள் அப்படியே விடவும்.

பின்னர் குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு தலைமுடியை நன்கு கழுவ வேண்டும்.

2.வினிகர் மற்றும் முட்டை கண்டிஷனர்

unknown node

2-3 முட்டைகள், வினிகர் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு இரண்டு தேக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் ஒரு தேக்கரண்டி, மற்றும் தேன் ஒரு தேக்கரண்டி போன்றவற்றை பிளெண்டரில் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும்.

முடியின் நுனியில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும்.

பின்னர், வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் உங்கள் முடியை நன்கு அலசவும்.

3.தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் கண்டிஷனர்

unknown node

தேங்காய் எண்ணெய் 1தேக்கரண்டி, தேன் 1தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 1தேக்கரண்டி, தயிர் 2தேக்கரண்டி, மற்றும் ரோஸ் வாட்டர் 1தேக்கரண்டி கலந்த பேஸ்டை உருவாக்கிக்கொள்ளவும்.

அந்த பேஸ்டை தலைமுடியில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே தலையில் வைத்திருக்கவும்.

பின்னர், குளிர்ந்த நீரில் முடியை நன்றாக அலச வேண்டும்.

4.யோகர்ட் ஹேர் கண்டிஷனர்

unknown node

ஆறு தேக்கரண்டி தயிர் மற்றும் ஒரு முட்டை நன்றாக அடித்து கொள்ளவும்.

இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.

உங்கள் தலைமுடியை மென்மையான துண்டு அல்லது துணியால் மூடி வைக்கவும்.

குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் முடியை அலசவும்.

5.ஆப்பிள் சைடர் வினிகர் கண்டிஷனர்

unknown node

இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து மென்மையான பேஸ்ட்டாக்கவும்.

உங்கள் தலைமுடியில் இதைப் பயன்படுத்துங்கள்.

பின்னர், 15-30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முடியை கழுவ வேண்டும்.

6.அலோ வேரா ஹேர் கண்டிஷனர்

unknown node

நான்கு தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து அரைத்துக்கொள்ளவும்.

இந்த பேஸ்டை உங்கள் தலைமுடியில் தடவி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.