அசைவப்பிரியர்களின் மத்தியில் மட்டன் ஒரு தனி இடம் பிடித்துள்ளது .மட்டனை வைத்து குழம்பு மட்டும் அல்லாமல் கிரேவி, சூப், கோலா, பிரியாணி என பல வகைகள் தயார் செய்யலாம் .அந்த வரிசையில் இன்று மட்டன் சுக்கா செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:
மட்டன்= அரை கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட்= இரண்டு ஸ்பூன்
மஞ்சள் தூள்= அரை ஸ்பூன்
மிளகு= ஒரு ஸ்பூன்
சீரகம்= ரெண்டு ஸ்பூன்
தனியா= ஒரு ஸ்பூன்
கடலை பருப்பு= ஒரு ஸ்பூன்
கிராம்பு= நான்கு
பட்டை= இரண்டு
சின்ன வெங்காயம்=20
மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் =4
செய்முறை:
குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து கிளறி மட்டனையும் அதிலே சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். மஞ்சள் தூள் மற்றும் தண்ணீரை சேர்த்து ஆறு விசில் வரை விட்டு இறக்கவும்.
தனியா, மிளகு, சீரகம், வரமிளகாய்,கடலைப்பருப்பு , பட்டை, கிராம்பு போன்றவற்றை வறுத்து பவுடர் ஆக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கருவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து கிளறவும் அதிலே சின்ன வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பொன் நிறமாக வதக்கவும். வதங்கியவுடன் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி அதிலே மட்டனை சேர்க்கவும் பின்பு அரைத்த மசாலா பவுடரை சேர்க்கவும். ஒரு ஐந்து நிமிடம் எண்ணெய் பிரியும் வரை கிளறி கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும் இப்போது நாவில் சுவையூரும் சுக்கா ரெடி.
சிக்கனை விட மட்டனில் அதிக அளவு புரதம் உள்ளது மேலும் ப்பீப் ஐ விட குறைவான அளவு கொழுப்பு உள்ளது. மட்டனில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது இது நரம்பு மண்டலம் மற்றும் தசைகளுக்கு ஊட்டம் அளிக்கிறது.
விட்டமின் பி12 ஒரு சில உணவுகள் வகைகளை இருக்கும் குறிப்பாக மட்டன் போன்ற அசைவ உணவுகளில் அதிக அளவு காணப்படும்.
அயர்ன் , சிங்க் ,மெக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளது.
இந்த மட்டனை நாம் வாரத்திற்கு ஒரு நாள் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம்.
இதய நோய் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் எண்ணெய் அதிகம் சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டு வரலாம். மேலும் மட்டன் எடுத்துக்கொள்ளும் போது நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களையும் கூடவே எடுத்துக் கொள்வது மிகச் சிறந்தது. மட்டன் சாப்பிடும் போது இந்த முறையை கையாண்டால் நமது உடம்பில் கொழுப்பு படிவதை தவிர்க்கலாம்.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…