லைஃப்ஸ்டைல்

MurungaiLeaf Bujji : முருங்கை கீரையில் பஜ்ஜி செய்யலாமா..? அது எப்படிங்க..?

Published by
லீனா

நம் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய கீரைகளில் ஒன்று முருங்கை கீரை. பெரும்பாலானவர்கள் வீட்டில் இந்த கீரை காணப்படுகிறது. இந்த கீரை எளிதில் கிடைக்க கூடியது என்றாலும், இந்த கீரையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளது.

முருங்கை கீரையில் வைட்டமின்கள், தாதுக்கள், இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு அளிக்கிறது. இப்படிப்பட்ட நன்மைகளை கொண்ட முருங்கை கீரையை வைத்து, வித்தியாசமான முறையில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • சோள மாவு – 1/2 கப்
  • கடலை மாவு – 1/2 கப்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • சீரக தூள் – 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
  • முருங்கை கீரை – 5 கொத்து
  • உப்பு -தேவையான அளவு

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் சோள மாவு, கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் நாம் வைத்துள்ள முருங்கைக்கீரை கொத்துக்களை சிறு சிறு இணுக்குகளாக தனியே பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் கொதித்ததும் ஒவ்வொரு சிறு சிறு கொத்துக்களாக எடுத்து மாவில்  முக்கி கடாயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான முருங்கைக்கீரை பஜ்ஜி தயார்.

குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேக்கும் போது இதனை செய்து கொடுக்கலாம். கீரையை சாப்பிடுவதற்கு மறுக்கும் குழந்தைகள், இப்படி வித்தியாசமான முறையில் செய்து கொடுக்கும்போது விரும்பி சாப்பிடுவர்.

Published by
லீனா

Recent Posts

பெரியார் பற்றி சீமான் சர்ச்சை பேச்சு : அதிமுக ஏன் கண்டிக்கவில்லை? செல்வப்பெருந்தகை கேள்வி!

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை பெரியார்…

31 minutes ago

கேரளாவிலும் பொங்கல் விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

திருவனந்தபுரம் : நாளை முதல் பொங்கல் பண்டிகைகள் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை (ஜனவரி 14) பொங்கல் தினம,…

50 minutes ago

“யுவராஜ் சிங்கிற்கு பிறகு சஞ்சு சாம்சன் தான்”…புகழ்ந்து தள்ளிய சஞ்சய் பங்கர்!

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 4 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய…

1 hour ago

வாழ்வில் மகிழ்ச்சி பொங்க பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான் ..!

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கான காரணங்களும், அதன் சிறப்புகளும், பொங்கல் வைக்க சரியான நேரம் எது என்பதை பற்றி இந்த செய்தி…

2 hours ago

களைகட்டும் ஜல்லிக்கட்டு : அவனியாபுரத்தில் வெற்றிபெற்றால் என்ன பரிசு தெரியுமா?

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முடிந்து வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் தயாராகிவிட்டார்கள் என்று தான்…

2 hours ago

காஷ்மீர் சுரங்கப்பாதை : கடந்த வருடம் தீவிரவாத தாக்குதல்.. இந்த வருடம் பிரதமர் மோடி திறந்து வைப்பு!

காஷ்மீர் : ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் மற்றும் காகங்கீர் இடையிலான 'இசட்-மோர்' (Z-Morh) சுரங்கப்பாதையை இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார்.…

2 hours ago