Mudakkathan Halwa : கை, கால் வலியால் அவதிப்படுகிறீர்களா..? அப்ப இந்த அல்வா சாப்பிடுங்க..!
பெரும்பாலும் 35 வயதை கடந்து விட்டாலே, உடலில் ஏதாகிலும் ஒரு பிரச்னை வந்துவிடும். அந்த வகையில், பெரும்பாலானோர் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று கை, கால் வலிதான். இந்த பிரச்னை பலரையும் அப்படியே உக்கார வைத்து விடும். தற்போது இந்த பதிவில், கை, வலியை போக்கும் முடக்கத்தான் அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முடக்கத்தான் செடியை பொறுத்தவரையில், அதில் பல மருத்துவ பயன்கள் உள்ளது. முடக்கத்தான் இலைகள், தண்டுகள் மற்றும் வேர் ஆகியவை உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. முடக்கத்தான் இலைகள் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவை சாம்பார், குழம்பு, பொரியல் போன்ற உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. முடக்கத்தான் தண்டுகள் மற்றும் வேர்கள் பொரியல், வறுவல் போன்ற உணவுகளில் சேர்க்கப்படுகின்றன.
இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இது நமது உடலில் பல ஆரோக்கிய ன்னமைகளை அளிக்கிறது. அந்த வகையில், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இப்படிப்பட்ட மருத்துவ பயனர்களை கொண்ட முடக்கத்தான் இலைகளை பயன்படுத்தி அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இதையும் படிங்க – Kidney Stone : சிறுநீரகத்தில் கற்களா..? அப்ப கண்டிப்பா இதை செய்து சாப்பிடுங்க..!
தேவையானவை
- முடக்கத்தான் இலைகள்
- முந்திரி
- பாதாம்
- கான்பிளவர் மாவு – 3 ஸ்பூன்
- வெண்ணெய் – சிறிதளவு
- சீனி – 1 கப்
- பைனாப்பிள் எசென்ஸ் – சிறிதளவு
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் முடக்கத்தான் இலைகளை இரண்டு அல்லது மூன்று தண்ணீரில் நன்கு கழுவி அதனை மிக்ஸியில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அரைத்து எடுத்த கலவையை வடிகட்டியில் நன்கு வடித்து சாறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றி சூடானவுடன் அதில் முந்திரி, பாதாம் ஆகியவற்றை போட்டு பெரிய விட வேண்டும். இதற்கிடையில்கான்பிளவர் மாவை தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். முந்திரி பாதாம் நன்கு பொரிந்த உடன் கான்பிளவர் கலவையை அதனுள் ஊற்றி, வடிகட்டி வைத்துள்ள முடக்கத்தான் சாற்றை அதனுள் ஊற்றி, தேவையான அளவு சீனியை போட்டு கிளற வேண்டும்.
நன்கு அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறி விட வேண்டும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் பட்டர் தடவி அல்வாவை ஊற்றி, 2 மணி நேரத்திற்கு பின் அதனை துண்டு துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.
குறிப்பு
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் முடக்கத்தானைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.