பேன் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? கவலையை விடுங்க…இதோ தேர்வு!

பேன் என்ற  பெயரை கேட்டாலே கை தானாக தலைக்கு போய்விடும் அந்த அளவுக்கு அதன் தொந்தரவை  நாம் அனைவருமே அனுபவித்திருப்போம். பேன்  எப்படி வருகிறது அதைப் போக்க என்ன வழிகள் உள்ளது என இந்த பதிவில் பார்ப்போம்.

நம் தலையில் பேன் இருந்தால் சரியாக தூங்க கூட முடியாது ஏனென்றால் அந்த அளவுக்கு அரிப்பு இருக்கும். பேனில்  இரண்டு வகை உள்ளது ஒன்று மனிதர் இடத்திலும் மற்றொன்று விலங்குகள் மற்றும் பறவைகள் இடத்திலும் காணப்படும்.
குறிப்பாக இந்த பேன்  பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் ஆண்களை விட பெண்களிடமே அதிகமாக காணப்படுகிறது.

இந்தப் பேன்  சுலபமாக ஒரு தலையில் இருந்து இன்னொரு தலைக்கு  விரைவாக ஓடி வந்து விடும். பேன்  இருப்பவர்களிடம் அதிக நேரம்இருப்பது , அவர்கள் பயன்படுத்திய சீப்பு துண்டு, டிரஸ் போன்றவற்றைகளை பயன்படுத்தும் போதும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களிடத்தில் பரவுகிறது. மேலும் தலையை சரியாக பராமரிக்காமல் இருந்தாலும் கூட இந்த பேன்  வந்துவிடும். ஒரு பேன்  சராசரியாக 10 முட்டைகள் போடும் .

வாரத்தில் இது பேனாக மாறி நம் ரத்தத்தை குறிஞ்சி விடும் ஆனால் இதன் வாழ்நாள் முப்பது நாட்கள் தான். இதனால் நமக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும். மேலும் ஒரு சிலருக்கு உடல் எடை குறைவு, தலையில் துர்நாற்றம் ஏற்படும். இது ரத்த சோகையை கூட ஏற்படுத்தும்.

உங்களுக்கு அடிக்கடி வாய்ப்புண் ஏற்படுகிறதா.? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்.!

பேன் தொல்லை நீங்க வேப்ப இலைகளை அரைத்து தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்து வரவேண்டும் தொடர்ந்து நான்கு வாரங்கள் இதை செய்ய வேண்டும். மேலும் தலை குளித்த பின்பு சீப்பால் வார வேண்டும். அப்போதுதான் முற்றிலுமாக அந்த பேன் நீங்கும்  . அது மட்டும் இல்லாமல் வேப்பிலை கலந்த ஷாம்புகளை பயன்படுத்தலாம்.

வேப்ப எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சம அளவு எடுத்து முடியின் வேர்க்கால்களில் தேய்த்து முடியை கழுவி வரவும். இம்முறையை வாரம் ஒருமுறை செய்து வரலாம். உங்கள் முடிக்கு தேவையான காய்ச்சாத பால் எடுத்துக்கொள்ளவும் அதிலே பத்து மிளகு எடுத்து கலந்து 20 நிமிடம் தலையில் ஊற வைத்து பிறகு கழுவ வேண்டும். இந்த மிளகை நாம் பயன்படுத்தும் போது தலையில் எரிச்சலோ அல்லது அரிப்போ ஏற்படாது. பயப்படத் தேவையில்லை. ஆகவே இந்த முறைகளை பயன்படுத்தி பேனை ஒழிப்போம். முடியை பேணி காப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்