இல்லாதரசிகளே! சப்பாத்தி மென்மையாக வர வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!
இல்லத்தரசிகளே! நாம் நமது வீடுகளில் சப்பாத்தி செய்யும் போது, சுவையாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டுமென்றால் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
நம் நமது வீடுகளில் காலையிலோ அல்லது இரவு நேரத்திலோ டிபன் செய்து சாப்பிடுவது உண்டு. அதிலும் சப்பாத்தி என்றாலே சிறியவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவது. இந்த சப்பாத்தி சுவையாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டுமென்றால் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
- சப்பாத்தி மாவு பிசைவதற்கு முன்னால், கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
- சப்பாத்தி உருட்டும் போது அதனை நான்காக மடித்து உருட்டினால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
- சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால், சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.
- கோதுமை மாவில் வண்டு வராமல் இருக்க, சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டுகள் வராது.
- சப்பாத்தி மாவு பிசையும்போது சுடு தண்ணீர் ஊற்றிப் பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.
- சப்பாத்தி மென்மையாக இருக்க சப்பாத்தி மாவு கலக்கும் போது பேக்கிங் சோடா அரை தேக்கரண்டி சேர்க்க வேண்டும்.
- சப்பாத்தி மாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மென்மையாகவும் உப்பியும் வரும்.
- சூடான பால் சிறிதளவு சேர்த்து, மாவு பிசைந்தால் சப்பாத்தி மென்மையாக காணப்படும்.