ஆண்களே! உங்கள் தாடி மீசை இயற்கையான முறையில் வளர சூப்பரான டிப்ஸ் இதோ..!
ஆண்கள் பொதுவாக நல்ல அடர்த்தியான தாடி மீசை வளர வேண்டும் என விரும்புவார்கள். ஒரு சிலருக்கு இயற்கையாகவே வளரும், ஆனால் ஒரு சிலருக்கோ விரைவில் வளர்வதில்லை இதனால் கவலையடைவர்களும் உள்ளனர், இயற்கையான முறையில் தாடி வளர செய்வது எப்படி என்றும் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் தாடி வளர்ப்பு எண்ணெய்கள் பயனுள்ளதா என்பது பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆண்களுக்கு 16 வயதிலிருந்து 30 வயது வரை தாடி ,மீசை போன்ற முடிகள் வளரச் செய்யும். இது ஒவ்வொரு ஆண்களின் உடல் செயல்பாட்டிற்கு ஏற்ப மாறுபடும்.
தாடி மீசை வளர தடையாக இருக்கும் காரணங்கள்
ஒரு சில ஆண்களுக்கு விரைவில் தாடி மீசை முடிகள் வளர்வதில்லை இதனால் மற்றவர்களுடன் ஒப்பிட்டு தாழ்வுமனப்பான்மைக்கு ஆளாவார்கள் . தாடி மற்றும் மீசை வளர்ப்பில் முக்கிய பங்காவாக இருப்பது அவர்களின் மரபணுக்கள் தான்.
80 சதவீதம் மரபணுக்கள் என்றால் 20% உணவு முறை என்று வைத்துக் கொள்ளலாம். இந்த மரபணுவின் மூலம் பிரச்சனை இருந்தால் அதை நாம் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும், இதற்கு இயற்கை முறையில் என்ன செய்தாலும் பலன் அளிக்காது. மற்றவருடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் ஒவ்வொருவரின் உடல் செயல்பாடுகள் வேறு, ஜீன் வேறு, இதனால் தாழ்வு மனப்பான்மை அடைவதை தவிர்த்து விடுங்கள்.
டெஸ்ட்ரோஸ்ட்ரான் ஹார்மோன்
டெஸ்ட்ரோஸ்ட்ரான் ஹார்மோன் குறைவாக சுரந்தாலும் மீசை தாடி வளராது. அது மட்டுமல்லாமல் ஒருவேளை இந்த ஹார்மோன் சுரந்தாலும் அது டைஹைட்ரோ டெஸ்டோஸ்டரான் ஆக மாறாமல் இருந்தாலும் தாடி மீசை வளர்வதில் தடை ஏற்படலாம்.
இயற்கையான முறைகளை மேற்கொள்ளும் வழிகள்
புரதம் அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பயிறு வகைகள், முட்டை, மாமிசம் போன்றவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி தோல் மற்றும் முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்காக இருக்கிறது. இது விதைகள் மற்றும் கொட்டை வகைகளில் அதிகம் உள்ளது,வேர்க்கடலை, பாதாம் மீன்களிலும் அதிகம் காணப்படுகிறது. உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் இது மெட்டபாலிசத்தை அதிகரித்து அனைத்து பகுதிகளுக்கும் ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி முடிகளை வளரச் செய்யும். அது மட்டுமல்லாமல் நல்ல தூக்கம் வேண்டும்.
விளக்கெண்ணெய்:
விளக்கெண்ணையை முடி இல்லாத இடத்தில் தினமும் தேய்த்து வரலாம். கற்றாழை ஜெல்லை எடுத்து முடி இல்லாத இடங்களில் 15 நிமிடங்கள் மஜாஜ் செய்து வரலாம்.
மார்க்கெட்டுகளில் கிடைக்கும் தாடி வளர்ப்பு எண்ணெய்கள்:
இந்த எண்ணெய்கள் ஏற்கனவே உள்ள முடிகளை வளரச் செய்யுமே தவிர வளராத முடியை முளைக்கச் செய்யாது..
ஒரு சிலர் அடிக்கடி சேவ் பண்ணினால் விரைவில் முடி வளரும் என எண்ணுவார்கள். அவ்வாறெல்லாம் ஒன்றுமில்லை ஏற்கனவே உள்ள முடிகள் தடிமன் ஆகுமே தவிர புதிய முடிகள் வளராது.
எனவே மீசை தாடி இருந்தால்தான் ஆண்மகன் இன்று இல்லை அது ஒரு ஸ்டைல் அவ்வளவுதான். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது அதற்கேற்ப உங்களை மாற்றி அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.