அலெக்ஸ்சாண்டர் கிரகாம் பெல் ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் என பன்முக தன்மை கொண்ட ஒரு சாதனை மனிதன் ஆவார். இவர் ஸ்காட்லாந்தில், 1847-ம் ஆண்டு, மார்ச் 3-ம் தேதி பிறந்தார். இவர் இளமையில் பிரித்தானிய குடிமகனாக இருந்தார். பின்னர் அமெரிக்க குடியுரிமையை பெற்றார்.
இவர் தனது எட்டு வயதிலேயே நன்றாக பியானோ வாசிப்பதில் கைதேர்ந்தவர். பள்ளிப்படிப்பில் நாட்டமில்லாத கிரகாம், பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளை பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது கவனத்தை செலுத்தி வந்தார். இவர் பேச்சை மின்ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தபோது, ஒரு காதுகேளாத பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இன்று நமது கைகளில் தொலைபேசி இருப்பதற்கு காரணமாக திகழும் சாதனை மனிதன் கிரகாம். இவரது தாயாரும், மனைவியும் செவிடர்கள். இவர்களின் இந்த நிலை தான், பெல் தொலைபேசியை கண்டுபிடிப்பதற்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது என்று கூட கூறலாம்.
இவரது ஆற்றல் மிக்க திறமையால், 1876-ம் ஆண்டு, அவர் கண்டுப்பிடித்த உலகின் முதல் தொலைபேசி மூலம், அவரது உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார். பெல் முதலில் தொலைபேசியில் பேசிய முதல் சொற்றோடர் என்னவென்றால், ‘ வாட்சன் இங்கே வாருங்கள், உங்களை காண வேண்டும்”இவர் பேசிய இந்த சொற்களை வாட்சனால் தெளிவாக கேட்க முடிந்தது.
இவர் கண்டுபிடித்த தொலைபேசி பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை. இதனையடுத்து, பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில், இவர் கண்டுபிடித்த தொலைபேசி பார்வைக்கு வைக்கப்பட்டது. இதனை பார்த்த பிரேசில் நாட்டு மன்னர் இதனை வியப்போடு எடுத்து பயன்படுத்தினார். அதன்பின் தான் இந்த தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது.
மறைவு
இவ்வாறு பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த சாதனை நாயகன் கிரஹாம் பெல், அமெரிக்காவில் உள்ள பாடக் என்ற ஊரில், 1922-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி காலமானார். இவர் மறைந்த தினத்தன்று அமெரிக்காவில் உள்ள அனைத்து தொலைபேசியிலும் 5 நிமிடம் அணைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…