மதுரை ஸ்பெஷல்.. முள் முருங்கை கீரை வடை செய்வது எப்படி?
சளி இருமலுக்கு ஏற்ற மருத்துவ குணமிக்க முள் முருங்கை கீரை வடை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை- சளி இருமலுக்கு ஏற்ற மருத்துவ குணமிக்க முள் முருங்கை கீரை வடை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்;
- பச்சரிசி =அரை கப்
- மிளகு= ஒரு ஸ்பூன்
- சீரகம்= 2 ஸ்பூன்
- அரிசி மாவு =2 ஸ்பூன்
- முள் முருங்கை கீரை= 20 இலைகள்
செய்முறை;
முதலில் கீரையில் உள்ள காம்பு மற்றும் நரம்புகளை பிரித்தெடுத்து கொள்ளவும். இப்போது மிக்ஸி ஜாரில் பச்சரிசி, மிளகு, சீரகம், முள் முருங்கை கீரை மற்றும் சிறிதளவு தண்ணீர்ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இப்போது அதை வேறு பாத்திரத்தில் மாற்றி இரண்டு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும் .தேவைப்பட்டால் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
பிறகு இவற்றை பத்து நிமிடம் ஊற வைத்துவிட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி அந்த உருண்டைகளை தட்டையாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் பூரி போல எழும்பி வரும் அப்போது அதை எடுத்து விட வேண்டும். இப்படி ஒவ்வொன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும் ,பிறகு பொரித்த வடைகள் மீது பருப்பு பொடி தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவையோடு இருக்கும்.