அன்னாசி பழம் தொப்பையை குறைக்க உதவுமா ?
- அன்னாசி பழம் தொப்பையை குறைக்க உதவுமா ?
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே தொப்பை தான். இன்று அதிகமானோருக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் அவர்களது உணவு கட்டுப்பாடு இல்லாத தன்மை தான் தொப்பை வருவதற்கு காரணம்.
இன்று அதிகமானோர் வீட்டில் சாப்பிடுவதை விட, வெளியில் கடைகளில் சாப்பிடுவதை தான் விரும்புகின்றனர். இன்று நமது தமிழ் கலாச்சாரத்திற்கும் ஊடுருவி உள்ள மேலை நாட்டு உணவு வகைகள், முழுவதும் அதிகமான கலோரிகளை கொண்ட உணவு வகைகள்.
இதனை நாம் உண்ணும் போது, நமது உடலில் கொழுப்புகளை படியப்பண்ணி அது தொப்பை உருவாகவும், உடல் எடை அதிகரிக்கவும் காரணமாகிறது. தற்போது அன்னாசி பழத்திற்கு தொப்பையை குறைக்கக் கூடிய தன்மை உள்ளதா என்பதை பற்றி பார்ப்போம்.
தொப்பையை குறைக்கும் அன்னாசி
தேவையானவை
- அன்னாசி – பாதி அளவு
- ஓமப்பொடி – நான்கு தேக்கரண்டி
- தண்ணீர் – 1 டம்ளர்
அன்னாசிப் பழத்தை பாதி அளவு எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து இறக்கி, சூடு ஆறியதும் மூடிவைக்க வேண்டும்.
இரவில் இப்படிச் செய்த அந்தக் கலவையை மறுநாள் காலை வெளியே எடுத்து நன்றாகப் பிழிந்து சாறு எடுத்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 10 நாள்கள் குடித்து வந்தால் தொப்பை குறைந்துவிடும்.
உடல் பளபளப்பாக
அன்னாசி பழத்தை பாயாசமாக, ஜாமாக செய்து 40 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பளபளப்பாக மாறி விடும். மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டாம்
இந்த பழத்தில் இயற்கை சர்க்கரை அதிகமாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விடும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பம் தரித்தவர்கள் சாப்பிட வேண்டாம்.
இந்த பழம் கருச்சிதைவை ஏற்படுத்தக் கூடும் என்பதால், பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்ப நாட்களில் இந்த பழத்தை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
இதில் அதிக அளவில் அமிலத் தன்மை உள்ளதால் பழம் சாப்பிட்டதும் தொண்டையில் ஏதோ ஊறுவதுபோல இருக்கும். சிலருக்கு வயிற்று வலியும் ஏற்படலாம்.
வாதநோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டாம்
நாம் இந்த பழத்தை சாப்பிடும் போது, இந்தப் பழம் குடல், இரைப்பைக்குள் செல்லும்போது ஆல்கஹாலாக மாறி, கீல் வாதத்தை தூண்டிவிடும். எனவே, வாதம் உள்ளவர்கள் இதை அதிகம் சாப்பிடாமல் இருப்பது நல்லது.