நம் உடலின் வாசத்தை நம்மால் அதிகம் நுகர முடியாததன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

Default Image

பொதுவாக நம்மால் எல்லா வித வாசனைகளையும் எளிதில் நுகர முடியும். நம் அருகாமையில் உள்ள பொருட்களை மிக விரைவாக நுகரலாம்; தூரத்தில் இருக்கும் பொருட்களின் மணம் அதிக வலியதாய் இருப்பின், அதையும் நம்மால் உணர இயலும். மனித நாசியால் ஒரு டிரில்லியன் வாசனைகளை நுகர முடியும் என்று அறிக்கைகள் வெளியாகி உள்ளன.

இந்த பதிப்பில், நம் உடலின் வாசத்தை நம்மால் அதிகம் நுகர முடியாததன் அறிவியல் காரணம் பற்றி தெரிந்து கொள்ளலாம், வாருங்கள்!

நாசியின் குணம்

ஏதேனும் ஒரு பொருள் தூரத்தில் எரிய நேரிட்டால் அதை எளிதில் நம் நாசியால் நுகர முடியும்; இவ்வாறு வேண்டத்தகாத நாசியை நுகர்கையில் அந்த வாசனை நம்மை வந்து சேராத அளவு தூரம் செல்ல விழைகிறோம். இதுவே நமக்கு அருகில் யாரேனும் பிரியாணி சமைக்கும் வாசத்தை நுகர நேரிட்டால், அந்த இடத்தை உடனடியாக அடைந்து அதை சுவைக்க துடிக்கிறோம்.

எப்படி நடக்கிறது?

ஒவ்வொரு விஷயத்திற்கும் ஏற்றவாறு நம் விருப்பங்கள் எவ்வாறு மாறுகின்றன என்று என்றாவது சிந்தித்து உள்ளீரா? இது எப்படி நடக்கிறது என்று யோசித்து உள்ளீர்களா? நம் நாசி நுகரும் வாசனைகள் எல்லாம் ஒரு மில்லி வினாடி நேரத்திற்கும் குறைவான வேகத்தில், மூளையின் கார்டெக்ஸ் பகுதியை அடைகிறது; மூளையை அடைந்த பின் அது என்ன வாசனை என்று மூளை நமக்கு உணர்த்துகிறது; அந்த உணர்வூட்டலின் அடிப்படையில் நாம் செயல்படுகிறோம்.

நம்மை உணர முடியாதா?

நம் உடலில் எழும் வாசனைகளை ஒரு சில நிமிடங்களே நாம் கவனித்து நுகர்வோம், அதற்கு மேல் வேறு வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கி விடுவோம்; ஆனால், இதுவே மற்ற நபர் அல்லது மற்ற பொருளில் இருந்து வந்த வாசத்தை நாம் நன்கு நினைவில் வைத்திருப்போம்.

அறிவியல் காரணம்

இதற்கு ஒரு முக்கிய அறிவியல் காரணமும் உண்டு. நம் மீதிருந்து வரும் வாசம் நம்முடனேயே எப்போதும் இருக்கும்; ஆதலால் அதை நாம் அடிக்கடி நுகர்ந்து கொள்வதில்லை; இதுவே மற்ற பொருட்கள் எனில் அது மூளையில் பதிவு செய்யப்படும்.

இதன் மூலமாகவே மல்லிகையின் வாசம் எப்படி இருக்கும் என்று நம்மால் எப்பொழுது வேண்டுமானாலும் கூற முடியும்; உணர முடியும்; இது போலவே மற்ற பொருட்களும். ஆனால் நம்முடைய வாசத்தை நம்மால் எப்பொழுதும் நுகர முடியாது; மேலும் திட்டவட்டமாக வரையறுத்து கூறவும் முடியாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்