ஒரு பெண், ஆணின் காதலை என்ன காரணங்களுக்காக நிராகரிக்கிறாள் ?
- பெண்கள் ஆண்களின் காதலை என்ன காரணங்களால் மறுக்கின்றனர்.
காதல் என்பது மனிதனுக்கு உரித்தான இயல்பான குணம் தான். இன்றைய சமூகத்தில் காதல் என்பது பல வரைமுறைகளை தாண்டி தவறான பாதையை நோக்கி செல்கிறது. இதற்கு என்ன காரணம் என்று பறக்க போனால் பல காரணங்கள் சொல்லலாம்.
காதலித்து திருமணம் செய்வதை விட, திருமணம் செய்து விட்டு காதல் செய்வது தான் சரியானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்கும். நமது குணாதிசயங்களோடு ஒத்து போகக் கூடிய துணை தான் நமது வாழ்க்கைக்கு பொருத்தமானதாக இருக்கும்.
அப்படி இல்லையெனில், அது கயிறில் தொங்கிக்கொண்டு இருக்கும் நிலைக்கு தான் ஒப்பிடப்படுகிறது. ஏனென்றால் நமது குணாதிசயங்களுக்கு ஒத்து போகாமல், இருந்தால், கயிற்றில் தொங்கிக்கொண்டு இருக்கும் உறவு எப்போது வேண்டுமானாலும் அறுந்து விழலாம்.
இந்தச் சிக்கலைத் தவிர்க்க முன் கூட்டியே அவர் எப்படிப்பட்டவர் என்பதைக் கண்டறிந்து முடிவெடுப்பது அவசியமானது.
முரண்பட்ட தன்மையுடைவர்
உங்களுடைய வாழ்க்கை துணை சில முரண்பட்ட கருத்துக்களை கொண்டவராக இருக்கலாம். மற்றவர்களிடம் முரட்டுத் தனமாக நடந்து கொள்வது, சொல் பேச்சுக் கேளாமை , மரியாதையின்மை போன்ற குணாதிசயங்கள் அவரிடம் இருக்கலாம்.
ஆனால், உங்களிடம் வேண்டுமானால் அப்படி நடந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், இந்த குணாதிசயங்கள் அவரின் குணமாக இருக்கலாம். அவை உங்களிடமும் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படலாம்.
சுயநலம்
ஒரு சிலர் தன்னை பற்றியே எப்போதும் யோசித்து கொண்டு, தன்னை பற்றியே எப்போதும் பெருமை பேசிக்கொண்டு இருப்பார்கள். அவர் அவருக்கு மட்டுமே முக்கியதுவம் அளிக்கிறார். அவரின் தனிப்பட்ட கனவு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். எனவே இப்படிப்பட்டவர்களை தேர்ந்தெடுப்பதில் யோசித்து தான் முடிவெடுக்க வேண்டும்.
கவனமில்லா தன்மை
எப்பொழுதுமே ஒரு பெண் தனது துணையுடன் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றும் தனி கவனம் எடுத்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவதும் இயல்பான ஒன்று தான்.
உங்களை மகிழ்ச்சிபடுத்த, பெருமைபடுத்த ஒரு போதும் முயற்சிகள் செய்யவில்லை. உங்களுக்காக எந்த விஷயத்தையும் சிரமமெடுத்து செய்யவில்லை எனில் அப்படிப்பட்ட ஒருவரை தேர்தடுப்பது குறித்து யோசிப்பது நல்லது.
உறவுகள்
திருமணவாதற்கு முன்பதாகவே கைகளைப் பிடிப்பது, தோள் மீது அவ்வபோது கை போடுவது என்பது இயல்பே. அதையும் தாண்டி, அடிக்கடி தவறான முயற்சிகளுக்கு முற்படுவது, உங்களைக் கட்டாயப்படுத்துவது போன்ற நடத்தைகள் இருந்தால் அவரை தேர்ந்தெடுப்பது குறித்து யோசிப்பது சிறந்தது.
முன்னாள் காதலியுடன் உரையாடுவது
ஆண்களை பொறுத்தவரையில் திருமணம் ஆவதற்கு முன்பதாகவே மற்ற பெண்களுடன் நேசித்து பேசுவது வழக்கம். அந்த வகையில், இப்படிப்பட்ட குணாதிசயங்கள் உள்ளவர்களை தேர்ந்தெடுப்பது குறித்து யோசிப்பது சிறந்தது.