ஹெல்தியாக இருக்க சிறந்த 7 வழிகள்

Default Image
  • உடல் ஆரோக்கியத்துடன் இருக்க சிறந்த வழிகள்.

நமது அன்றாட ஓடி ஓடி உழைப்பது ஒரு ஜான் வயிற்றின் பசியை போக்குவதற்கு தான். ஆனால், நாம் நமது வயிற்று பசியை ஆற்றுவதற்கு பல வழிகளை மேற்கொண்டு வருகிறோம். நாம் உழைப்பதற்கு நமது உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

நேரத்திற்கு விழியுங்கள்

நாம் வாழ்வில் உறக்கம் எனபது மிகவும் முக்கியமான ஒன்று தான். ஆனால், அதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது. ஆனால் அந்த சமயங்களில் நாம் தூங்காமல், செல்போனை வைத்து நொண்டிக் கொண்டு இருந்துவிட்டு தூங்கும் நேரம் கடந்து சென்ற பிறகு, தாமதமாக தூங்கி தாமதமாக எழுந்திருக்கிறோம்.

Related image

இவ்வாறு இருப்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய ஒன்று தான். எனவே நாம் எப்போது அதிகாலையில் நேரத்திற்கு விழித்துக் கொள்பவராக இருக்கும் போது, அது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும்.

தண்ணீர் குடியுங்கள்

தண்ணீர் என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. தண்ணீர் குடிப்பதை நாம் குறைத்து கொண்டால், அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல கேடுகளை விளைவிக்கிறது.

Image result for தண்ணீர் குடியுங்கள்

எனவே எவ்வளவு வேலைகள் இருந்தாலும், அவற்றை ஒதுக்கி விட்டு, தண்ணீர் குடிப்பதில் முழு கவனம் செலுத்தி, ஒரு நாளைக்கு குறைந்தது 6 கிளாஸ் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

காலை உணவு

Image result for காலை உணவு

நம்மில் பலர் அதிகாலையிலேயே வேலைக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் சாப்பிடாமலும் செல்வார்கள், அதை தவிர்த்து, உணவுகளை நாகு கொண்டு போயாவது சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருக்க வேண்டும். காலை உணவை சரியான நேரத்திற்கு தவறாமல் உன்ன வேண்டும்.

காய்கறிகள் பழங்கள்

Image result for காய்கறிகள் பழங்கள்

நாம்மில் அதிகமானோர் நாகரீகம் என்கின்ற பெயரில் பல மேலை நாட்டு உணவுகளை அருந்துவதன் மூலம் நமது ஆரோக்கியம் கெட்டு போவதோடு, உடல்நிலையும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறது.

உடற்பயிற்சி

Image result for உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்பது நமது அன்றாட வாழ்வில் மிகவும் அவசியமான ஒன்று. இது நமது வாழ்க்கையில், நமது உடல் நலத்தில் பல ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. மேலும், இது பல நோய்கள் வருவதை தடுத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இயற்கையை நேசியுங்கள்

Image result for இயற்கையை நேசியுங்கள்

இயற்கை என்பது நமக்கு இறைவன் கொடுத்த வரம். அதை நாம் அளிக்காமல் பாதுகாப்பது நமது கடமை. நமது வாழ்வில் பல பிரச்சனைகள், போராட்டங்கள் வரலாம். எல்லா பிரச்சனைகளும் இருந்தாலும், இயற்கை ரசிக்கின்ற பழக்கத்தை வளர்த்து கொள்ளும் போது, அவை எல்லாம் பறந்து போய்விடும். மேலும், இது உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

புதிய விடயங்களை கற்றுக்கொள்ளுங்கள்

Image result for புதிய விடயங்களை கற்றுக்கொள்ளுங்கள்

போதுமென்ற மனம் இருக்க வேண்டும், அது உண்மை தான். ஆனால் கற்றுக்கொள்வதில் இந்த குணம் இருக்க கூடாது. எனக்கு தான் எல்லாம் தெரியும். இதற்கு மேல் ஒன்றும் எனக்கு தெரிய வேண்டி இல்லை என இல்லாமல், நாளுக்கு நாள் புதிய விடயங்களை கற்று கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். இதுவும் ஒரு வகையில் நாம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்