கோடை வெப்பத்தை தாங்க முடியலையா அதிலிருந்து தப்பிக்க டிப்ஸ்

Default Image

நமது உடலில் வெப்பம் அதிகரிப்பதற்கு பல விதமான காரணங்கள் உள்ளன. எனவே இந்த வெப்பநிலை மாறுபட்டால் அதிக அளவு பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.

அதிலும் தற்போது நிலவி வரும் கோடைகாலத்தில் பலருக்கும் பல விதமான நோய்கள் உடற் சூடு காரணமாக ஏற்படுகிறது. இந்த் நோய் தொற்றுகளில் இருந்து தப்பிக்க பல வழிமுறைகளை நாம் கையாண்டாலும் அதில் இருந்து நமக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. கோடைகாலத்தில் இருந்து நம்மை எவ்வாறு நோய்தொற்றுகளில் இருந்து பாதுகாத்து கொள்வது பற்றிய வழிமுறைகளை இந்த பதிப்பில் இருந்து படித்து தெரிந்து கொள்வோம்.

கோடைகாலத்தில் ஏற்படும் நோய்கள்:

 

உடலின் வெப்பநிலை அதிகரிப்பதால் தான் உடலில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகிறது.வயிற்று வலி,இருமல்,சிறு நீர் கழிக்கும் பொது எரிச்சல்,,கண் எரிச்சல்,அம்மை போன்ற பல நோய்களை சந்திக்க நேரிடும்.

எவ்வாறு நமது உடல் சூட்டை  எளிய சில வழி முறைகளை நாம் இங்கு பார்ப்போம் இந்த வழிமுறைகளை அன்றாடம் கோடைகாலங்களில் பயன்படுத்தி உடல் சூட்டில் இருந்து நம்மை விடுவித்து கொள்ளலாம்.

நல்லெண்ணெய் :

 

நல்லெண்ணய் உடல் சூட்டை தணிப்பதற்கு ஒருமிகசிறந்த காரணியாக விளங்குகிறது. ஒரு கரண்டியில் நல்லெண்ணையை எடுத்து கொண்டு அதை சூடு படுத்த வேண்டும்.எண்ணெய் சிறிது சூடானவுடன் அதில் தோல் உரித்த பூண்டு மற்றும் ஒரு மிளகை போட்டு சூடு படுத்த வேண்டும்.அதற்கு பிறகு எண்ணெய் ஆறியவுடன் அந்த எண்ணெயை வலது மற்றும் இடது காலின் பெருவிரல் நகத்தில் மட்டும் போட வேண்டும்.2 நிமிடங்கள் கழித்து காலை கழுவி  விட வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் உடல் சூடு தணியும்.

மாதுளை ஜூஸ்:

 

மாதுளை உடலில் பல நோய்களை குணப்படுத்தும்.அந்த வகையில் உடல் சூட்டை தணிக்க மிகவும் சிறப்பு வாய்ந்த மருந்தாகும்.

கோடையில் தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸில் 2-3 துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும் .இதனால் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறையும்.

கோடையில் புதினாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி,வடிகட்டி தேன் கலந்து குடித்து வர அதில் உள்ள குளிர்ச்சித்தன்மையினால் உடல் சூடு தணியும்.அதே போல் நாட்டு வெங்காயத்தை நெய்யில் போட்டு நன்கு வதக்கி சாப்பிட்டாலும் உடல் சூடு குறையும்.

உடலின் வெப்பத்தை சீராக வைத்து கொள்ள தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு 1 டேபிள் ஸ்பூன் எள்ளை சாப்பிட வேண்டும்.எள்ளில் ஓபியேட்ஸ் உள்ளதால் இதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்த கூடாது.

மேலும் குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.

தேன் மற்றும் பால் :

 

உடல் வெப்பத்தை குறைக்கும் சிறந்த பானம் என்ன வென்றால் அது பால் மற்றும் தேன் கலவை தான்.மேலும் வெது வெதுப்பான நீரில் பால் ,தேன் கலந்து குடித்து வருவதன் மூலம் உடல் வெப்பம் குறையும்.

ஆரஞ்சு:

 

வைட்டமின் சி நிறைந்த உணவு பொருள்களான ஆரஞ்சு,  எலுமிச்சை ஆகிய உணவு பொருட்களை உற்கொள்ளுவதால் வெயில் காலத்தில் பல விதமான பிரச்சனைகளில் இருந்து நம்மை  பாதுகாத்து கொள்ளலாம். இந்த இரண்டு பழங்களையும் ஜூஸ் போட்டு பருகி வர படிப்படியாக உடல் சூடு தணியும் .

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்