தொப்பையை குறைக்க சூப்பர் டிப்ஸ்
- தொப்பையை குறைக்க சூப்பர் டிப்ஸ்.
இன்று அதிகமானோரின் மிகப்பெரிய பிரச்சனையே இந்த தொப்பை தான். இதனை குறைப்பதற்கு வலி தெரியாமல் அலைவோரின் எண்ணிக்கை அதிகம். எப்படி இந்த தொப்பை வந்தது, வந்த தொப்பையை எப்படி குறைப்பது என்று பலர் கேள்வி கேக்கலாம்.
அவர்களது கேள்விகளுக்கான பதிலாக, இந்த பதிவில் தொப்பையை குறைப்பதற்கான சில வழிகளை பற்றி பார்ப்போம்.
எலுமிச்சை ஜூஸ்
தொப்பையை குறைப்பதற்கான எளிய வழிகளில் ஒன்று எலுமிச்சை ஜூஸ். தொப்பை அதிகமாக உள்ளோர், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை விட்டு, சிறிது உப்பு சேர்த்து, இனமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இது மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்து, வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.
தண்ணீர் குடிங்க
நம்மில் அதிகமானோர் வேலையை பொருட்படுத்தி, நமது உடலுக்கு தேவையான தண்ணீரை குடிப்பாதில், அக்கறை செலுத்துவதில்லை. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி போதிய இடைவெளியில் தண்ணீர் பருகினால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்.
இனிப்பு உணவுகளை சாப்பிடாதீங்க
இனிப்பு உணவுகளை சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால், தொப்பையை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இனிப்பான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இனிப்பான உணவுகளை சாப்பிடும் போது, இது இரத்ததில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்வதோடு, உடல் எடை மற்றும் தொப்பை குறைவதால் தடையை உண்டாக்குகிறது.
அசைவ உணவுகளை சாப்பிடாதீங்க
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். னென்றால் அவற்றை கொழுப்பு சத்து அதிகமாக உள்ளதால், இது வயிற்றில் கொழுப்பை பாடிய செய்து உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.
அன்னாசி
உடல் எடையை குறைப்பதில் அன்னாசி பலம் முக்கியமான பங்கினை வகிக்கிறது. அன்னாசியில் மிக குறைவான அளவே கலோரி உள்ளது. 100 கிராம் அன்னாசியில், 40 சதவீதம் கலோரி தான் உள்ளது.
மேலும் அன்னாசியில் 90 சதவீதம் நீர்சத்து உள்ளது. அதிலுள்ள பொட்டாசியம் அதிகப்படியான நீரை வெளியேற்றுகிறது. இதனால் நமது வயிற்றில் உள்ள கொழுப்புகள் கரைந்து விடும்.