கோடை வெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்!
கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், நமது உடலுக்கு பல வகையான ஆபத்துக்கள் நேரிடாக் கூடும். நமது உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், நமது சரும ஆரோக்கியமும் கூட பாதிக்கப்படுகிறது.
தற்போது இந்த பதிவில் கோடை வெயிலில் இருந்து நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில வழிமுறைகளை பார்ப்போம்.
சருமப்பொலிவு
கோடை வெயிலில் சரும வறட்சியை போக்கி, பொலிவுடன் இருப்பதற்கு, எலுமிச்சை சாற்றுடன், தேவையான அளவு பன்னீர் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மாய் போல கலந்து தினமும் முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவுடன் இருக்கும்.
முக சுருக்கம்
கோடை வெயில் தாக்கத்தால் நமது முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் இருக்க, முட்டையின் வெள்ளை கருவுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால், முகச்சுருக்கத்தை போக்கி, அழகாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மேலும், கோடையின் தாக்கம் அதிகமாக தாக்கமால் இருக்க, சோற்று கற்றாலையின் சாற்றை கைகள், பாதங்கள் மற்றும் கழுத்து பகுதிகளில் பூசிக் கொள்ள வேண்டும்.
சரும அரிப்பு
கோடை காலத்தில் உடலில் எந்தவிதமான அரிப்பும் ஏற்படாமல் இருக்க, வேப்ப மரத்தில் உள்ள இலைகளை பறித்து, நீரில் போட்டு ஊற வைத்து, அந்த நீரில் குளித்து வந்தால், சருமத்தில் எந்த அரிப்பும் ஏற்படாது.
கண் பிரச்சனைகள்
கோடை காலத்தில் கண் பிரச்சனைகள் ஏற்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ள வெள்ளரிக்காயை மெல்லிய துண்டுகளாக வெட்டி கண்களின் மீது வைத்து ஒற்றி எடுக்க வேண்டும். அப்படி செய்து வந்தால், கண் சம்பந்தமான பிரச்சனைகளில், இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
சரும பிரச்சனை
கோடைகாலத்தில் ஏற்பாடக் கூடிய அனைத்து சரும பிரச்சனைகளையும் தீர்க்க, அரை கப் பால், ஒரு தேக்கரண்டி தேன், அரை கப் ஓட்ஸ் எடுத்து நன்றாக கலக்கி முகத்தில் மசாஜ் செய்து வந்தால் அனைத்து சரும பிரச்சனைகளில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.