சருமத்தில் வியர்க்குரு பிரச்சனை அதிகமாக இருக்குதா அ வற்றை போக்க சூப்பர் டிப்ஸ்

Default Image

கோடைகாலம் வந்தாலே உடலின் வெப்பம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வியர்க்குரு பிரச்சனையும் நம்மை வாட்டி எடுக்கிறது.

மேலும் கோடைகாலத்தில் நாம்  வெளியில் சென்றால் உடல் அதிக அளவு வியர்த்து வியர்க்குரு பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். மேலும் இந்த பிரச்சனைகளை போக்கி கொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளது.

கோடைகாலத்தில் வியர்க்குரு ஏற்படுவதற்கான காரணங்கள் :

கோடைகாலத்தில் காற்றோட்டம் குறைவாக இருப்பதால் உடல் அதிக அளவில் வெப்பமடைந்து வியர்வை வெளியேறி வியர்குருவாக மாறுகிறது. இதனால் நமக்கு உடல் எரிச்சல் அதிகமாகிறது. மேலும் பல காரணங்களால் உடலில் வெப்பநிலை அதிகமாகிறது.

உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது உடலில் உள்ள தேங்கும்  உப்பு மற்றும் இதரக்கழிவுகளை வியர்வைசுரப்பி வியர்வையாக வெளியேற்றும்.

வியர்க்குரு எவ்வாறு உருவாகிறது என்றால் சருமத்தில் உள்ள வியர்வை சுரப்பிகளின் வாயில்களில் அழுக்கு மற்றும் தூசிகள் படிந்து விடுவதால் வியர்வை சுரப்பிகளில் அடைப்பு ஏற்பட்டுகிறது எனவே இதனால் வியர்க்குரு உருவாகிறது.

கோடைகாலங்களில் இறுக்கமான உடைகள் அணிவதாலும் வியர்க்குரு பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் உடல் பருமன் அதிகம் இருப்பார்கள் எளிதாக வியர்க்குரு பிரச்சனையை சந்திப்பார்கள். இயற்கையாக  உடல் வெப்பநிலை அதிகமாக உள்ள நபர்கள் மிக எளிதில் இந்த பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது.

மேலும் இந்த வியர்க்குரு பிரச்சனைகளை கவனிக்காமல் விட்டு விடுவதால் சொறி,படை ,சிரங்கு  என பல சரும பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.

சந்தன பொடி:

சந்தன பொடி உடலிற்கு குளிர்ச்சியை தர வல்லது. மேலும் சந்தனம் சருமத்தில் ஏற்படும் பல் நோய்களை குணப்படும் அருமருந்தாக பயன்படுகிறது.

சந்தன பொடியை பன்னீர் மற்றும் ரோஸ்வாட்டர் கலந்து பேஸ்ட் செய்து சருமத்தில்  வியர்குரு இருக்கும் இடங்களில் தடவி வந்தால்  மிகவும் பலன் அளிக்கும்.

வெள்ளரிக்காய்:

 

வெள்ளரிக்காய் உணவாக எடுத்து கொண்டால் நமது உடலுக்கு பல ஊட்டச்சத்துக்களையும் ,நீர்சத்துக்களையும் அதிக அளவில் கொடுக்கிறது.

எனவே கோடைகாலத்தில் நமது உடலுக்கு வெள்ளரிக்காயை மிக சிறந்த உணவாக பயன்படுகிறது.

சருமத்தில் வியர்க்குரு இருக்கும் இடங்களில் வெள்ளரிக்காயை அரைத்து பூசி சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவிவர சருமத்தில் இருக்கும் வியர்க்குரு படிப்படியாக குறையும். மேலும் உடலுக்கு அதிகப்படியான  குளிர்ச்சியை கொடுக்கும்.

மேலும் வெள்ளரிக்காய்  மற்றும் கிருணிப்பழம் ஆகியவற்றை கோடைகாலத்தில் அதிக அளவில் உட்கொண்டால் வியர்க்குரு,அக்கி ,அம்மை முதலிய நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம்.

பப்பாளி :

 

 

பப்பாளி நமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு மிக சிறந்த தீர்வாக விளங்குகிறது.பப்பாளியில்  அதிகப்படியான சத்துக்கள் நிரம்பி காணப்படுகிறது. சரும பிரச்சனைகளுக்கு பப்பாளி அருமருந்தாக பயன்படுகிறது.

பப்பாளி சாற்றை  உடலில்  வியர்குரு இருக்கும் இடங்களை போட்டு வர வியர்குரு நீங்குவதோடு உடல் பளபளப்பாக இருக்கும்.

வேப்பிலை :

வேப்பிலை நமது உடலில் ஏற்படும் பல்வேறு விதமான நோய்களை குணப்படுத்தும் சிறந்த மூலிகையாகும்.வேப்பிலையை சரும பிரச்சனைக்கு மிக சிறந்த மூலிகையாகும்.

வேப்பிலை  இலைகளை தண்ணீரில்  போட்டு நன்கு கொதித்தவுடன் இறக்கி ஆறவைத்து அந்த நீரினால் வியர்க்குரு உள்ள இடங்களை கழுவி வர வியர்குருவினால் ஏற்படும் அரிப்புகள் நீங்கும்.

தேங்காய் எண்ணெய்:

 

நமது உடலுக்கு ஊட்டம் அளிக்கும் எண்ணெய்களில் தேங்காய் எண்ணெய்யும் ஒன்று.

இரவு உறங்க செல்வதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் மற்றும் சீரக பொடியை நன்கு குழைத்து வியர்க்குரு இருக்கும் இடங்களில் பூச வேண்டும். மறுநாள் காலையில் குளிர்ந்த நீரை கொண்டு சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர வியர்க்குரு படிப்படியாக குறையும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்