கோடைகால நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சில வழிமுறைகள்…..

Default Image
  • கோடைகால நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சில வழிமுறைகள்.
  • கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம் நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது மிகச் சிறந்தது.

கோடைகாலம்  வந்தாலே சிலருக்கு பயம் ஏற்பட்டு விடுகிறது. காலங்கள் மாறுவது இயற்கையான செயல்கள் தான் என்றாலும், அக்காலங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.

Image result for கோடைகாலம்

கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம் நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது மிகச் சிறந்தது. வாழ்க்கை முறை என்றால் நமது உணவு மற்றும் உடை போன்றவற்றில் நாம் காலத்திற்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொள்வது தான்.

தற்போது வெயில் காலங்களில் நாம் கையாள வேண்டிய வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

தண்ணீர்… தண்ணீர்

வெயில் காலங்களில் நமக்கு இன்றியமையா ஒன்றாக தண்ணீர் உள்ளது. நாம் உயிர்வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் நாம் நமது உடலில் உள்ள நீர் சத்துக்கள் வற்றி போகாமல் இருக்க, அதிகமாக நீரினை அருந்த வேண்டும்.

Image result for தண்ணீர்... தண்ணீர்

நம்முடைய உடலிலிருந்து  வெளியேறுவதற்கு தெண்ணீர் மிக அவசியம் என்பதால், நமக்கு தாகம் ஏற்படாத சமயங்களில் கூட நாம் தண்ணீரை பருக விடும்.

குளிர்பானம் தேவையில்லை

நம்மில் அதிகமானோர் வெயில் களங்களில் நமது உடலில் ஏற்படும் வெப்பத்தை தணிக்க குளிர்பானங்களை அருந்தினால், நமது உடல் குளிர்ச்சி அடைந்துவிடும் என்று நினைப்பதுண்டு. ஆனால் இது முற்றிலும் தவறானது.

Image result for குளிர்பானம்

நாம் குளிர்பானங்களை அருந்தும் போது, அவை நமது உடலில் தோலில் உள்ள இரத்த நாளங்களை ஷாருக் கட்டுப்படுத்துவதோடு வெப்ப இழப்புகளைக் குறைக்கிறது. இதனால் நமது உடலில் பல நோய்களை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கிறது.

எப்போதும் போல சாப்பிடுங்கள்

வெயில் காலங்களில் வெளியில் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் எளிதான சாப்பாடுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வெயில் காலங்களில் நம் உடலில் ஏற்படும் வெப்பத்தின் காரணமாக ஒருவரின் பசியை குறைக்க முற்படுகிறது.

Image result for சாப்பிடுங்கள்

இக்காலங்களில், நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், வெப்பத்தை எதிர்த்து போராடக் கூடிய ஆற்றல் நமது உடலுக்கு கிடைக்கும். எனவே நாம் எப்போதும் சாப்பிடுவது போல சாப்பிடுவது மிக நல்லது. சாப்பிட்டு அளவை குறைப்பதை தவிர்க்க வேண்டும்.

குளிர்ச்சியான குளியல்

கோடைகாலங்களில் நமது உடல் அதிகமாக வியர்வையாவை வெளியேற்றுகிறது. இதனால் அசௌகரிகமான சூழல் காணப்படுகிறது. இப்படிப்பட்ட நேரங்களில் நாம் குளிர்ச்சியான நீரில் குளிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

Image result for குளிர்ச்சியான குளியல்

இப்படி குளிப்பது நமது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. மேலும், இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன் முகத்தையும், கை கால்களையும் கழுவி விட்டு படுத்தாள் நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.

தளர்வான ஆடைகளை அணியுங்கள்

Image result for தளர்வான ஆடைகளை அணியுங்கள்

நாம் காலத்திற்கேற்றவாறு நமது உடைகளையும் மாற்றிக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. கோடைகாலங்களில் நாம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், மிகவும் இறுக்கமான ஆடைகளை தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிவதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி வேண்டாம்

நமது உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமான ஒன்றுதான். ஆனால், கோடைகாலங்களில் அதிக அளவிலான ஆற்றலை செலவு செய்து உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.

Image result for உடற்பயிற்சி

வெளியில் சென்று உடற்பயிற்சி செய்யாமல், உடல் பயிற்சி கூடங்களுக்கு சென்று குறைந்த அளவில் உடற்பயிற்சிகளை மேற்கோளாவது சிறந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்