சருமம் பளபளப்பாகவும்… மிருதுவாகவும் இருக்க சில வழிகள்….!!!
இன்றைய இளம் தலைமுறையினரின் மிக பிரச்சனையே சரும பிரச்சனைகள் தான். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இளம் தலைமுறையினர் பல வழிகளில் மருத்துவம் பார்த்தாலும் அதற்கான முழுமையான தீர்வை கண்டு கொள்வதில்லை. மாறாக பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது.
பப்பாளி :
நன்கு பழுத்த பப்பாளி பலத்தை சீவி அரைத்து, உடல் முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு போட்டு உடம்பை தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் பப்பாளி பலம் சாப்பிட வேண்டும். வாழைப்பழத் தோலையும் இது போலத் தேய்த்து குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் பப்பாளி சாப்பிட்டால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
மாதுளைப்பழம் :
அவ்வப்போது மாதுளைப்பழம் சாப்பிட்டு வந்தால் மேனியை மினுமினுப்பாக்கி உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.
வாழைப்பழம் :
பழுத்த வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
பசும்பால் :
பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம் அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
தேங்காய் பால் :
தேங்காய் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்து வந்தால் சோர்வடைந்த நிலையில் உள்ள சருமம் புத்துணர்ச்சி பெறும்.
தேங்காய் எண்ணெய் :
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டு குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்து குளித்தால், தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.