கண் கருவளையம் போக்க எளிய வீட்டு வைத்தியம்

Default Image

இன்றைய இளம் தலைமுறையினரை பாதிக்கும் சரும பிரச்சனைகளில் கண்ணில் கருவளையமும் ஒன்று. முகத்தின் அழகை கண் கருவளையம் கெடுத்து விடும். இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்னவென்றால் நாம் சரிவர உறங்காமல் இருப்பதும் கண்ணில் கருவளையம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்து விடுகிறது.

இரவு நேரங்களில் தூங்காமல் நாம் டிவி , செல்போன்களை நாம் அதிகம் பயன்படுத்தவதாலும் இந்த பிரச்சனையால் பாதிக்கபடுபவர்கள் அநேகம் பேர். இந்த பிரச்சனைகளுக்கு பல விதமான மருந்துகளை பயன்படுத்தியும் பலன் அளிக்கவில்லை என பலரும் அவதிப்படுகிறார்கள். இந்த பிரச்சனைக்கு இயற்கையாக எவ்வாறு தீர்வு காணலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

உருளைக்கிழங்கு :

இன்றைய நவீன காலத்தில் நாம் வேலைப்பளு காரணமாக இரவில் சரிவர தூங்குவதில்லை.இரவில் நாம் தூங்கவில்லை என்றால் சருமம் கலையை இழக்கும்.மேலும் கண் கருவளையம் முதலிய பிரச்சனைகளுக்கு நாம்  ஆளாக நேரிடலாம்.

 

உருளைக்கிழங்கில் நமது சருமத்திற்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களையும் கொண்டுள்ளது.

எனவே வரம் இருமுறை உருளைக்கிழங்கை தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு அரைத்து கண்ணில் கருவளையம் இருக்கும் இடத்தில் பூசி வர கண்ணில் ஏற்படும் கருவளையம் நீங்கும்.மேலும் இது கண்ணிற்கு குளிர்ச்சி தரும்.

 ஆரஞ்சு சாறு:

ஆரஞ்சு ஜூஸை பிரிஜ்ஜில் வைத்து பின்பு நன்கு கட்டியானவுடன் கண்ணில் வைத்து ஒத்தி எடுக்கவும். இவ்வாறு வாரத்தில் 3 முறை செய்து வந்தால் போதும் கண்ணில் இருக்கும் கருவளையம் நீங்கி கண் அழகாக மாறும்.

 

 

தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கவும்,கண்ணை எப்போதும், பிரகாசமாக வைப்பதற்கும்  ஆரஞ்சு பயன்படுகிறது.

ரோஸ் வாட்டர் :

ரோஸ் வாட்டர் கண்ணில் உருவாகும் கருவளையத்தை நீக்குவதில் மிகவும் பேருதவி புரிகிறது. மேலும் இது கண்ணிற்கு குளிர்ச்சியை கொடுக்கும்.

 

 

இது நமது சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளை நீக்குவதில் பேருதவி புரிகிறது.

பாதாம் எண்ணெய் :

 

பாதாம் எண்ணெய் கண்ணில் உள்ள கருமை நிறத்தை போக்குவதற்கு மிக சிறந்த மருந்தாகும். பாதாம் எண்ணையை தேனுடன் கலந்து கண்ணில் கருவளையம் இருக்கும் இடங்களில் பூசி மசாஜ் செய்து வர கண்ணில் இருக்க கூடிய கருவளையம் நீங்கி கண் அழகாகும்.

வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காய்  கண்ணில் ஏற்படக்கூடிய கருவளைத்தை போக்குவதில் முக்கிய மருந்தாக பயன் பட்டு வருகிறது. இதுகண்களுக்கு பொலிவினையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.

 

வெள்ளரிக்காய் வெட்டி கண்களில் வைத்தால் கண் எரிச்சல் நீங்கும்.வெள்ளரிக்காயை சாறு எடுத்து பிரிஜ்ஜில் சில நிமிடங்கள் குளிர வைத்து அதனை மசாஜ் செய்து வநதால் போதும் கண்களில் இருக்க கூடிய கருமை நீங்கி கண் அழகாக மாறும்.

 அன்னாசி:

 

அன்னாசிப்பழத்தையும், மஞ்சள்தூளையும் பேஸ்ட் போல் அரைத்து கண்களில் தினமும் தடவி வந்தால் கண்ணில் இருக்கும் கருவளையம் நீங்குவதோடு கண் பளபளப்பாகவும் மாறும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்