மனித உடலுக்கு தேவையான அளவில் சத்துக்கள் கிடைக்கவில்லை என்றால் அவை பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும். இரத்தம் உடலில் சுரக்க இரும்புசத்து எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு நீர்ச்சத்தும் முக்கியம்.
இதன் அளவு குறைந்தால் ஒவ்வொரு பாகமாக செயல் இழக்க ஆரம்பிக்கும். உடலில் நீர்சத்து குறைவாக இருந்தால் என்ன விதமான அபாயங்கள் உண்டாகும் என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்.
மலச்சிக்கல்
சரியான அளவில் நீர்சத்து உடலில் இல்லையென்றால் உங்களுக்கு ஏற்பட கூடிய அபாயம் மலச்சிக்கலே. இவை செரிமான மண்டலத்தை முழுவதுமாக பாதித்து பலவித பாதிப்பை வயிற்று பகுதியில் ஏற்படுத்தும்.
இரத்த அழுத்தம்
நமது உடலில் உள்ள 55 சதவீத இரத்தமும் திரவ நிலையில் இருப்பவையே. நீர்சத்து குறைந்தால் இரத்தத்தின் அடர்த்தியும் குறையும். இதனால் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இதயம் பாதிக்கும்.
சிறுநீர்
உடலின் முக்கிய பாகமான சிறுநீரகம் அதனது செயல்திறனை கொஞ்சம் கொஞ்சமாக நீர்சத்து குறைபாட்டால் குறைத்து கொள்ளும். குறைவான அளவு சிறுநீர் வெளியேறுவதால் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம்.
வறட்சி
நீர்சத்து குறைவாக இருந்தால் நமது முகமே காட்டி கொடுத்து விடும். முக வறட்சி, வெடிப்புகள், மிகவும் இறுகிய நிலையில் சருமம் பாதித்தல் போன்ற நிலை உங்கள் முகத்திற்கு உண்டாகும். ஆதலால் நீர்சத்து தர கூடிய உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.
சோர்வு
உடலில் அதிக அளவில் உள்ள நீர்ச்சத்து குறைந்தால் எப்போதுமே சோர்வாக உணர்வீர். பசியின்மை, தலைவலி, மயக்கம் ஆகிய பாதிப்புகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர கூடும். எனவே, தினமும் 3 லிட்டர் அளவு நீர் குடித்து வாருங்கள்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…