பணியாற்றும் இடம் உங்கள் உயிரை உண்மையில், நீங்களறியாமல் எப்படி உறிஞ்சுகிறது தெரியுமா?
நாம் இன்றைய காலத்தில் பணத்திற்காக எந்த வேலையையும், எவ்வளவு வேலையையும் செய்ய தயாராக இருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் பல்வேறு நிறுவனங்கள் குறைந்த ஊதியம் கொடுத்து, அதிக வேலைகளை ஊழியர்களிடம் இருந்து பெற்றுக்கொள்கின்றனர். பணியாளர்களில் பலர் தங்கள் வேலையின் மதிப்புக்கு தமது ஊதியம் பொருத்தமானதல்ல என அறிந்தும் பணியை ஆற்றி வருகின்றனர்.
இந்த பதிப்பில் நீங்கள் பணியாற்றும் இடம் எப்படி நீங்களறியாத வண்ணம் உங்கள் உயிரை உறிஞ்சுகின்றன என்பது பற்றி படித்தறியலாம்.
பன்மடங்கு பணி
வழக்கத்தை விட அல்லது உங்களால் செய்ய முடிவதை விட அதிகமான பணியை வழங்கி அதை முடிக்க, குறைந்த காலத்தை வழங்கினால் அது உங்களது பணியாற்றும் இடம் விஷத்தன்மை கொண்டுள்ளதைக் குறிக்கிறது.
இந்த மாதிரியான சூழல் ஏதேனும் முக்கிய தருணங்களின் பொழுது ஏற்பட்டால் அது நியாயமே! ஆனால் அதுவே தொடர் நிலையாக இருந்தால், உங்கள் வேலையை பற்றி நன்கு யோசிக்க வேண்டியது அவசியம்.
8 மணிநேரத்திற்கு மேல்!
உங்களது பணி நேரம் 8 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்தால், அது சரியான பணியிடம் அல்ல என்று உணருங்கள்; இந்த நிலை பல மாதங்கள் தொடர்ந்தால், பணி ஆற்றும் இடம் குறித்து நன்கு சிந்தியுங்கள்.
திமிரு பிடித்த மேலதிகாரிகள்!
திமிரு பிடித்த மேலதிகாரிகள் உங்களுக்கு மேல் இருந்தால், உங்களது வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் செல்லாமல் அப்படியே நின்று விடும். ஆகையால் நல்ல மேலதிகாரிகள் பணியாற்றும் பணியிடங்களை தேர்ந்தெடுங்கள்.
அதிக அவமானம்
உங்கள் வேலையை சரியாக செய்தாலும் அதிக அவமானத்தையே தொடர்ந்து சந்தித்தீர்களானால், அது உங்களுக்கு பொருத்தமானது தானா? நீங்கள் செய்வதற்கு சரியான மரியாதை கிடைக்கிறதா என்று யோசித்து மேலும் தொடருங்கள்..!
முதுகில் குத்துபவர்
உடன் பணியாற்றுபவர்கள் நட்புணர்வை விடுத்து, துரோக உணர்வுடன் முதுகில் குத்தும் வழக்கம் கொண்டிருந்தால், அது தொடர்ந்தால் அப்படிப்பட்ட நபர்களுடன் பணியாற்றுவதை தவிருங்கள் அல்லது பணியிடத்தில் அப்படிப்பட்ட நபர்களை சந்திப்பதை – பழகுவதை தவிருங்கள்.