பெண்கள் தங்களது அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர்கள். முக அழகை பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் கை, கால் பராமரிப்புகளிலும் அதிக ஈடுபாடுகாட்டி வருகின்றனர். சில பெண்களின் நகங்கள் பார்ப்பதற்கு நீளமாகவும், அதில் அழகாக வண்ணப்பூச்சு செய்தும் வைத்திருப்பார்கள். ஆனால் அனைவருக்கும் இதுபோன்று நீளமான நகங்கள் இருப்பது கிடையாது. சிலருக்கு நகங்கள் மிகவும் சிறியதாகவும் வளர்ச்சியும் குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு கால்சியம் சத்து குறைவாக இருப்பதால் சிறிது நகங்கள் வளர்ந்தவுடனேயே உடைந்து விடும். நகங்கள் வேகமாக வளர்வதற்கு இயற்கையான […]
அனைவரது சமையல் அறையிலுமே காய்கறிகள் ஒரு இன்றியமையாத ஒன்று தான். அதிலும் உருளைக்கிழங்கு சுலபமாக சமைக்கக்கூடியது மட்டுமல்லாமல், அதிக அளவு சத்துக்கள் கொண்டது. எனவே அனைவர் வீட்டிலுமே உருளைக்கிழங்கு சமையலறையில் முக்கியமான ஒரு பொருளாக இருக்கும். இந்த உருளை கிழங்கு விரைவில் கெட்டுவிடாமல் இருப்பதற்காக பலரும் பல வழிகளை உபயோகிக்கிறார்கள், இருப்பினும் கெட்டு விடுகிறது. உருளைக்கிழங்கு விரைவில் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? எப்படி உருளைக்கிழங்கை சேமிக்க வேண்டும்? கடையில் உருளைக்கிழங்கை வாங்கும் பொழுது எப்படி […]
சாப்பாடு என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணவுகள் பிடிக்கும். கலாச்சாரத்திற்கும், வயதிற்கும், பழக்கவழக்கத்திற்கும் ஏற்றவாறு உணவு மாறுபடும். அதிலும், தற்போதைய காலகட்டத்தில் உள்ள உணவு வகைகளில் பலரும் பிரியாணி விரும்பிகளாக தான் உள்ளனர். பிரியாணி செய்வது சுலபமானதாக இருந்தாலும், வீட்டிலேயே பிரியாணிக்கு தேவையான பொடி செய்து வைத்துக் கொள்வது நாம் செய்யக்கூடிய பிரியாணிக்கு மேலும் சுவையை கொடுக்கும். பிரியாணி செய்யும் பொழுது அதில் நாம் சேர்க்க கூடிய பிரியாணி பொடி தான் […]
தற்போதைய நவீன காலகட்டத்தில் எல்லா வீடுகளிலுமே பெரும்பாலும் குளிர்சாதனப் பெட்டிகள் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குளிர்சாதனப் பெட்டிகள் எதற்கு உபயோகிக்க வேண்டும் என்று தெரியாமலேயே பலர் உபயோகிக்கின்றனர். எதையெல்லாம் குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாதோ அதையெல்லாம் குளிர்சாதன பெட்டியில் வைக்கிறோம். அதிலும் சில பொருட்கள் வெளியில் இருந்தால் கெட்டுப் போய்விடும் என்பதற்காக அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து எத்தனை நாட்கள் கழித்து வேண்டுமானாலும் எடுத்து உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் அது தவறு. மேலும் சிலர் முட்டைகளை கடையில் இருந்து […]
சமையலுக்கு மிக முக்கியமான ஆதாரமாக விளங்கக்கூடிய வெங்காய சாறு சுவைக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திலும் அதிக அளவு பயன்படுகிறது. அதில் அதிக அளவு மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் முக்கியமான தாதுக்கள் அடங்கி உள்ளது. எனவே இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, உடல் வலிமை பெறுவதற்கும் உதவுகிறது. இந்த வெங்காயச்சாறு மூலமாக ஆண்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இது ஆண்களுக்கு எந்த விதத்தில் அதிகம் பயன்படுகிறது என்பதைக் குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் […]
சமையல் செய்வது என்பது மிகக் கடினமான ஒன்றும் கிடையாது, சாதாரணமானதும் கிடையாது. அது ஒரு கலை. சமையல் செய்வது ஆண்கள் பெண்கள் என பலருக்கும் பிடித்த ஒன்று. சிலர் சமையல் செய்வது ஏதோ பெரிய வேலை என நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் சமையலில் எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று தெரிந்தால் நிச்சயம் நீங்கள் சிறந்த சமையல் நிபுணராகவே மாறிவிடலாம். நமக்கு சமைக்க தெரியவில்லை என பலர் சமையல் செய்வதை ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால் […]
தலைவலி என்பது அனைவருக்குமே தெரிந்த ஒரு வியாதி தான். பலரும் இதை எதிர் கொண்டு இருப்போம். திடீரென்று தலை வலிக்க தொடங்கும் பொழுது என்ன செய்வதென்றே தெரியாத அளவிற்கு குழப்பமான மனநிலை ஏற்படும். இந்த தலைவலியில் பத்துக்கும் மேற்பட்ட வகை தலைவலிகள் இருக்கிறதாம். இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில் நிச்சயம் உலகில் உள்ள அனைத்து மனிதர்களுமே ஒருமுறையாவது இந்த தலைவலியால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. தற்பொழுதும் நாம் அனுபவிக்கக் கூடிய தலைவலி எந்த […]
பொதுவாக நாம் நீரில் அதிக நேரம் இருக்கும் பொழுது அல்லது நீரை அதிக நேரம் தொட்டு வேலை செய்யும் பொழுது நமது கைரேகைகள், கால் பாதங்கள் சுருங்கி வித்தியாசமாக மாறுவதை பார்த்திருப்போம். பலருக்கும் ஏன் இவ்வாறு சுருங்குகிறது என்று கேள்வி எழுந்திருக்கலாம். சிலருக்கு இதற்கு பதில் தெரிந்திருக்கலாம். பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஏன் இது போன்ற மாற்றங்கள் நமது கை, கால்களில் ஏற்படுகிறது என்பதை குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். சுருக்கங்கள் ஏற்பட காரணம் […]
பெண்கள் தங்கள் முக அழகை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று விரும்புவது வழக்கம். இதற்காக பல அழகு சாதனங்களைப் பெண்கள் விலைகொடுத்து வாங்கி உபயோகிக்கின்றனர். குறிப்பாக அழகு சாதனங்களில் மிக முக்கியமான ஒன்றாக விளங்குவது உதட்டுச்சாயம் என்று சொல்லக்கூடிய லிப்ஸ்டிக் தான். முன்பெல்லாம் லிப்ஸ்டிக் என்றால் சிவப்பு நிறம் தான் ஆனால், தற்பொழுது இது வெறும் சிவப்பு நிறத்தில் மட்டும் இருந்து விடுவதில்லை. ஒவ்வொரு உடைக்கும், இடத்திற்கும், சூழலுக்கும் தகுந்தவாறு வெவ்வேறு நிறங்களில் உதட்டுச் சாயங்கள் […]
இன்றைய பெண்கள் பலரும் தங்களது சமையலறையில் சில கடினமான சூழ்நிலைகளை சந்திப்பதுண்டு. தற்போது இந்த பதிவில், இல்லத்தரசிகள் அறிந்துகொள்ள வேண்டிய சில புதிய டிப்ஸ் பற்றி பார்ப்போம். டிப்ஸ் 1 வாணலியில் எண்ணெய் காய்ந்து கொண்டிருக்கும் போது எண்ணெயில் சிறிதளவு தண்ணீர் பட்டாலும், நம் மீது தெறிக்கும். அப்படி சமயங்களில் மைதா அல்லது கோதுமை மாவை சிறிதளவு சேர்த்தால் என்னை தெறிப்பது நின்று விடும். டிப்ஸ் 2 பச்சை மிளகாயை நாம் காம்புகளை எடுத்து விட்டு குளிர் […]
நமது வீடுகளில் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீர் குடிப்பது வழக்கம். இதில் சிலைக்கு டீ பிடிக்கும். சிலருக்கு காபி பிடிக்கும். எனவே டீயை தயாரிப்பதற்கு தேயிலையை வாங்கி பாட்டிலில் சேகரித்து வைப்பது போல, காபி தயாரிக்க காப்பி தூளையும் வாங்கி சேகரித்து வைப்பதுண்டு. ஆனால், இந்த காப்பித்தூள் சில நாட்களில் கட்டிபட்டு போய்விடும். தற்போது இந்த பதிவில், கட்டிபட்ட காபித்தூளை தூக்கி எறியாமல், எப்படி உபயோகமுள்ளதாக மாற்றலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். காபி தூள் […]
வீட்டிலிருக்க கூடிய பெண்கள் தங்களை விட தங்களை சுற்றியுள்ள இடத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். குறிப்பாக அதிகம் பெண்கள் பயன்படுத்த கூடிய கிச்சன் பகுதியை அழகாகவும் துர்நாற்றமில்லாமலும் வைத்திருக்க ஆசைப்படுவார்கள். அதற்கான சில குறிப்புகளை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சிங்க் துர்நாற்றம் நீங்க சிங்க் பகுதியில் அதிகம் நீர் புழக்கம் இருப்பதால், அங்கு துர்நாற்றம் காணப்படுவதுடன் அப்பகுதியில் பாசி பிடித்தும் காணப்படும். இந்த துர்நாற்றங்கள் நீங்குவதற்கு நாம் பூச்சி உருண்டை எனப்படும் நாப்தலின் […]
பொதுவாக நாம் அனைவரும் சந்தையிலிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி வந்தவுடன் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வைக்கிறோம். இந்த பழங்கள் அல்லது காய்கறிகள் புதிதாக இருப்பதற்காக இப்படி செய்யலாம். பல நாட்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லது தான். ஆனால் சில சமயங்களில் குளிர் சாதன பெட்டியில் சில உணவுகள் மற்றும் பானங்களை வைத்திருப்பது ஆபத்தானதாக கருதப்படுகிறது. தக்காளி குளிர்சாதன பெட்டியில் அதிக அளவு தண்ணீர் இருக்கும் பகுதிகளில் தக்காளி அல்லது […]
நாம் வேண்டாமென்று தூக்கி எரியும் முட்டை ஓட்டை எவற்றிற்க்கெல்லாம் பயன்படுத்தலாம். நமது வீடுகளில் அடிக்கடி முட்டையை பயன்படுத்தி உணவுகளை தயாரிப்பது உண்டு. ஆனால், அந்த முட்டையை பயன்படுத்திவிட்டு, அதன் ஓட்டை நாம் தேவையில்லை என்று கருதி தூக்கி எறிவதுண்டு. ஆனால், நாம் வேண்டாமென்று தூக்கி எறியக்கூடிய அந்த முட்டை ஓடு நமக்கு பல வகைகளில் பயன்படுகிறது. தற்போது இந்த பதிவில் முட்டை ஓட்டை எவற்றிற்க்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம். பல்லி தொல்லை நம்மில் அதிகமானோரின் வீடுகளில் […]
உங்களது உடல் எடையை குறைத்து ஆரோக்கியத்தை கொடுப்பது மட்டுமல்லாமல், முடி உதிர்வை நிறுத்தி முடியை அடர்த்தியாக மாற்றவும், முக அழகை பேணிக்காக்கவும் தினமும் ஒரு லட்டு மட்டும் சாப்பிட்டாலே போதும். அது என்ன லட்டு என்று கேட்கிறீர்களா? அந்த லட்டு எப்படி செய்வது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் கொள்ளு கருப்பு உளுந்து வேர்க்கடலை எள்ளு வெல்லம் ஏலக்காய் நெய் அல்லது நல்லெண்ணெய் செய்முறை ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு கப் […]
பணம் சேர்க்க மக்கள் அதிகம் விரும்புவதாக அறிவியல் கூறும் 5 ஆளுமை பண்புகள் குறித்து நாம் காண்போம். ஸ்டோயிக் தத்துவஞானி எபிக்டெட்டஸ் என்பவர் “செல்வம் பெரும் உடைமைகளைக் கொண்டிருப்பதில் இல்லை,ஆனால் சில விருப்பங்களைக் கொண்டிருப்பதில் உள்ளது”,என்று கூறியுள்ளார். ஆனால்,அது மக்களை பணக்காரர்களாக விரும்புவதைத் தடுக்காது. நாம் அனைவரும் செல்வத்தையும் வெற்றிகளையும் வித்தியாசமாக வரையறுத்தாலும், நம்மில் பெரும்பாலோர் குறைந்தது ஓரளவு செல்வத்தை(பணம்) நமது வெற்றி சமன்பாடுகளுக்குள் காரணியாக்குகிறோம். எனவே, நிதி (பணம்) வெற்றி மட்டுமே உங்களது குறிக்கோள் என்றால்,அது […]
பயன்படுத்திய தேயிலையை நாம் எப்படி உபயோகமாக பயன்படுத்தலாம். நாம் தினமும் நமது வீடுகளில் தேநீர் குடிப்பதுண்டு.இதற்காக நாம் தேயிலையை பயன்படுத்துவதுண்டு. நாம் தேநீருக்கு தேயிலையை பயன்படுத்திய பின், அதனை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், அந்த பயன்படுத்திய தேயிலையை, நமக்கு உபயோகப்படும் விதத்தில் பல வழிகளில் பயன்படுத்தலாம். தற்போது இந்த பதிவில், பயன்படுத்திய தேயிலையை நாம் எப்படி உபயோகமாக பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம். பயன்படுத்திய தேயிலையை நன்கு காய வைத்து, ஈரப்பதம் இல்லாமல் காய்ந்த பின்பு அதனை […]
கோடைகாலத்தில் ஆடையின்றி தூங்குவதால் உடலில் இருந்து வியர்வை வெளியேறாமல் தடுக்கப்படுகிறது. தூங்கும்போது பருத்தி, கைத்தறி போன்ற ‘லேசான காட்டன் துணிகளை’ அணிய வேண்டும். கோடைகாலத்தில், பொதுவாக வெயிலின் தாக்கமானது அதிகமாக இருப்பதால், தடிமனான போர்வைகள்,பைஜாமாக்கள் போன்ற ஆடைகளை பயன்படுத்துவதன் மூலம் மக்களின் தூங்கும் முறைகள் மாறுகின்றன. மேலும், வீட்டிற்கு வெளியே இருக்கும் அதிகபட்ச வெப்பத்தால், நம் உடலின் வெப்பம் உயர்ந்து, தூக்கம் என்பது ஒரு தொலைதூர கனவாக மாறுகிறது. எனவே, ஆடையின்றி தூங்குவதால், உடலின் வெப்பம் தணிந்து […]
முத்தமிடுவது சாதாரணமாக மனிதர்களாகிய நாம் அனைவருமே செய்யக்கூடிய ஒன்றுதான். ஆனால் உதட்டில் முத்தமிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். முத்தமிடுவது என்பது உலகில் வாழக்கூடிய அனைத்து மனிதர்களுமே செய்யக்கூடிய ஒன்று தான். தங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒருவருக்கு உதட்டில் முத்தமிடுவது வழக்கம். ஆனால் நாம் முத்தமிடுவது தவறல்ல, யாருக்கு முத்தம் இடுகிறோம் என்பதில் தான் கேள்வி எழும்புகிறது. அதாவது நோய் வாய்ப்பட்ட ஒருவரையோ அல்லது பாக்டீரியா தாக்கிய ஒருவரை நாம் முத்தமிடும் போது […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் அவரது பல் துலக்கும் பிரஷ் மற்றும் நாக்கு துப்புரவு செய்யும் கருவியை மாற்ற வேண்டும். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பலர் மீண்டும் தங்களுக்கு தொற்று பரவாது என்று நம்பி, பலவிதமான செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், தடுப்பூசிகள் ஒரு தடுப்பு நடவடிக்கைக்காக பயன்பட்டாலும் எல்லா […]