பெண்கள் ஆண்களின் காதலை என்ன காரணங்களால் மறுக்கின்றனர். காதல் என்பது மனிதனுக்கு உரித்தான இயல்பான குணம் தான். இன்றைய சமூகத்தில் காதல் என்பது பல வரைமுறைகளை தாண்டி தவறான பாதையை நோக்கி செல்கிறது. இதற்கு என்ன காரணம் என்று பறக்க போனால் பல காரணங்கள் சொல்லலாம். காதலித்து திருமணம் செய்வதை விட, திருமணம் செய்து விட்டு காதல் செய்வது தான் சரியானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்கும். நமது குணாதிசயங்களோடு ஒத்து போகக் கூடிய துணை தான் நமது வாழ்க்கைக்கு பொருத்தமானதாக […]
நமது இன்றைய இளம் தலைமுறையினர் பெரிதும் அவதிக்குள்ளாகும் பாதிப்புகளில் சருமம் பிரச்சனையும் ஒன்று. நமது உடல் ஆரோக்கியத்திற்கு உணவுகள் முக்கிய காரணியாக விளங்குவதை போல நமது சரும ஆரோக்கியத்திற்கு உணவும் மிகவும் அவசியமான ஒன்றாகும். கோடைகாலத்தில் தான் நாம் அதிகஅளவில் சரும பிரச்சனைகளினால் பாதிப்பிற்கு உள்ளாகிறோம். சரும பிரச்சனைகளை போக்க சில வழிமுறைகள்: சரும பிரச்சனைகள் பலவற்றை போக்க ஊட்டச்சத்துக்கள் அவசியம் தேவை. சருமம் புத்துணர்ச்சியுடன் இருந்தால் பல வெளிபுறக்காரணிகளால் ஏற்படும் சருமசேதத்தை முற்றிலும் தவிர்க்கலாம். எவ்வாறு […]
அக்காலத்தில் கோடை காலம் என்பது ஏப்ரல் மாத கடைசியில் தோன்றி, மே மாதம் முழுக்க நீடிக்கும்; ஆனால், இப்பொழுதோ ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே கோடை காலம் தோன்றிவிடுகிறது. ஆகையால் காலநிலை மாற்றங்களால் உடலில் பற்பல நோய்த்தொற்றுகளும் உண்டாகின்றன; கோடைகாலத்தில் உடலில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உரிய முன்னெச்சரிகளை நாம் வேண்டும். அப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பற்றியே இந்த பதிப்பில் நாம் படிக்கவிருக்கிறோம். ஏப்ரல் மாதத்தில், ஒவ்வொரு நாளும் வேப்பிலை சாப்பிட வேண்டியது ஏன் என்பது பற்றி […]
பப்பாளி பழம் நமது உடலுக்கு பல வகையான ஆற்றல்களை தரவல்லது.நாம் பப்பாளி பழத்தை பழமாக உட்கொண்டு பல நன்மைகளை அடைந்து இருப்போம். பப்பாளி குருமா செய்வது எப்படி? இந்த பழத்தை இவ்வாறு கொடுப்பதால் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.இதனை உணவில் சேர்த்து குருமாவாக சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிப்பில் இருந்து நாம் படித்து தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் பப்பாளி காய் – அரை கப் எண்ணெய் – இரண்டு குழிகரண்டி பட்டை – ஒன்று […]
வீட்டை சுத்தமாக பராமரித்துக் கொள்ளவது எப்படி? ” அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பது, மனித வாழ்க்கையைக் குறித்து கூறப்பட்டாலும், நமது முகத்தை பார்த்து தான், அகத்தை கணக்கிடுவார்கள். அது போல தான் நமது இலத்தின் தூய்மையை பார்த்து தான் நமது தூய்மையை கணக்கிடுவார்கள். இனிமையான இல்லம் நம்முடைய வாழ்வில் நமக்கு கிடைக்கும் அனைத்துமே இறைவன் நமக்கு கொடுத்த வரம். ( பொருட்கள், உடைமை,வீடு ….) இவற்றை முறைப்படி நாம் சுத்தமாக வைத்து கொண்டால் தான் இல்லம் ஒரு […]
நமது உடலில் வெப்பம் அதிகரிப்பதற்கு பல விதமான காரணங்கள் உள்ளன. எனவே இந்த வெப்பநிலை மாறுபட்டால் அதிக அளவு பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். அதிலும் தற்போது நிலவி வரும் கோடைகாலத்தில் பலருக்கும் பல விதமான நோய்கள் உடற் சூடு காரணமாக ஏற்படுகிறது. இந்த் நோய் தொற்றுகளில் இருந்து தப்பிக்க பல வழிமுறைகளை நாம் கையாண்டாலும் அதில் இருந்து நமக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. கோடைகாலத்தில் இருந்து நம்மை எவ்வாறு நோய்தொற்றுகளில் இருந்து […]
நமது உடல் சரியாக இயங்க உணவு அவசியம்; அந்த உணவு சில அடிப்படை சத்துக்கள் மற்றும் தாதுக்களை கொண்டிருத்தல் மிக அவசியம். உணவில் சரிவிகித சத்துக்கள் இடம் பெற்றிருந்தால் மட்டுமே உடலின் உறுப்புகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். சரியான சத்துக்கள் பெற்ற உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு இரத்தம் என்பது மிக அவசியமான ஒன்று ஆகும். இரத்தத்தில் சரியான அளவு ஹீமோகுளோபின் மற்றும் இரத்த வெள்ளையணுக்கள் இடம் பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த பதிப்பில் இரத்தத்திலுள்ள […]
இன்றைய தலைமுறையினர் பெரிதும் அவதிக்கு உள்ளாகும் பிரச்சனைகளில் ஒன்று இளநரை. இப்பிரச்சனைக்கு பல செயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி இந்த பிரச்சனைகளை அதிகபடுத்தி கொண்டவர்கள் நம்மில் எத்தனை நபர்கள் இருக்கிறோம். இளநரை உருவாக காரணம்: சாதாரண முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நோக்கில் பல விளம்பரங்களையும் பார்த்து விட்டு பலவிதமான கெமிக்கல் கலந்த பொருள்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். இருப்பினும் அந்த பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வுகள் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை. நாம் தலைக்கு […]
அன்றாடம் உட்கொள்ளும் உணவு பழக்கங்கள் நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.அந்த வகையில் இன்றைய இளம் பெண்கள் பெரிதும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முகத்தில் தேவை இல்லாத முடிகள் வளரும் பிரச்சனை.இந்த பிரச்சனைக்கு பல செயற்கை தீர்வுகள் இருந்தாலும் அவை நிரந்தரமான தீர்வுகளாக இருக்க வாய்ப்பில்லை. முடி வளர்ச்சி ஏற்படுவதற்கான காரணம்: பெண்கள் இன்றைய காலகட்டத்தில் அலுவலக வேலைகளுக்கு செல்லும் இளம் பெண்கலின் ஒழுங்கற்ற உணவு பழக்கம். மேலும் உடலில் […]
கோடைகால நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சில வழிமுறைகள். கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம் நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது மிகச் சிறந்தது. கோடைகாலம் வந்தாலே சிலருக்கு பயம் ஏற்பட்டு விடுகிறது. காலங்கள் மாறுவது இயற்கையான செயல்கள் தான் என்றாலும், அக்காலங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம் நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது மிகச் சிறந்தது. வாழ்க்கை முறை என்றால் நமது உணவு மற்றும் உடை […]
வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகம். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள சில வழிகள் உள்ளது. பருவகால மாற்றம் என்பது இயற்கையான ஒன்று தான். மக்கள் குளிர்கால மாற்றங்களை கூட தாங்கி கொள்கிறார்கள். ஆனால், வெயில் காலங்களில் ஏற்படும் மாற்றங்களை மக்களால் தாங்கி கொள்ள முடிவதில்லை. வெயில் காலம் தொடங்கி விட்டாலே பல நோய்கள் நம்மை தேடி வருகின்றன. இந்த நோய்களால் நமக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணமே, வெயிலை தாங்கிக்கொள்ள கூடிய சக்தி உடலில் இல்லாதது […]
தமிழகத்தின் பொள்ளாச்சியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே அதிர்க்குள்ளாக்கியுள்ளது. இந்த கொடுமையை நிகழ்த்திய படுபாவிகளுக்கு அரசு சரியான தண்டனையை உடனே வழங்க வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வருகிறது. என்ன தான் போராட்டம் செய்தாலும், கூச்சலிட்டாலும் அதற்கு தகுந்த பலன் கிடைக்காத நிலை தான் நம் தமிழகத்தில் நிலவி வருகிறது. ஆகையால் இனிமேல் எந்த பெண்ணுக்கும் இதுமாதிரியான சம்பவங்கள் நிகழ்ந்து விடாமல் இருக்க, நாம் என்ன செய்ய வேண்டும், குறிப்பாக பெண்கள் என்ன செய்ய […]
நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக பல அநியாயங்கள் நிகழ் காரணம் பெண்களுக்கு சரியான கல்வியறிவு அளிக்கப்படாதாதே ஆகும்; பல கற்றறிந்த பெண்கள் கூட தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள் பற்றி அறியாமல் இருக்கின்றனர். இது போல் பெண்கள் தங்களுக்கான அடிப்படை உரிமைகளை பற்றி அறிந்து கொள்ளாத வரையில் அவர்களுக்கு எதிராக நடைபெறும் அநியாயங்களும் கூட தடுத்து நிறுத்தப்பட சாத்தியமே இல்லை. இந்த பதிப்பில் இந்திய பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை சட்ட திட்டங்கள் பற்றி படித்து […]
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாக திகழ்வது போல், ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான சட்ட திட்டங்களை கொண்ட நாடாகவும் திகழ்கிறது. இந்தியாவில் தற்சமயம் பெண்களுக்கான அநியாயங்கள் அதிகரித்து வருகின்றன; இதற்கு நாம் அரசையும், தகாத செயல்களில் ஈடுபடும் ஆண்களையும் குற்றம் சொன்னாலும், இந்த அநியாயங்கள் நிகழ நம்மிடையே நிகழும் அறியாமையும் ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். இந்த பதிப்பில் ஒவ்வொரு இந்திய பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய சட்ட திட்டங்கள் பற்றி படித்து […]
தினமும் இரவு உறங்குகையில் நாம் அமைதியாக கண்ணுயர்ந்து ஓய்வு எடுக்கையில், நம் உடலின் உள்ளுறுப்புகள் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கின்றன; நமது உடலின் அன்றைய நாள் கழிவுகளை நீக்கி, அடுத்த நாளுக்காக நம்மை தயார் செய்ய, உடல் உள்ளுறுப்புகள் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படி இரவிலும் உழைக்கும் உள்ளுறுப்புகளுக்கு நாம் ஒவ்வொருவரும் உதவ வேண்டுமல்லவா! அது எப்படி என விளக்கவே இப்பதிப்பு. என்ன உதவி? நாள்தோறும் பல மாசுக்கள், புழுதிகள், கிருமிகள் நம்மை தாக்கும் வண்ணம் […]
நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தி பொருட்களியிலே ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன; இதை நன்கு அறிந்தும் நாம் அதை பெரிதாக மதிப்பதில்லை. அதனால் தான் என்னவோ சிறிய நோய்த்தொற்றையும் நம் உடலால் தாங்க முடியாத நிலை காணப்படுகிறது; நமது உடலுக்கு பெரிதாக ஏதேனும் பாதிப்பு வந்த பின் தான், இந்த மருந்து பொருட்களின் மகத்துவம் நமக்கு தெரிகிறது. வருமுன் காப்பதே சிறந்தது; ஆகையால், நாம் சமையலுக்கு பயன்படுத்தி வரும் பூண்டினை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் […]
கீட்டோ டயட் என்பது உடல் எடையை குறைந்த கால அவகாசத்தில் குறைக்க உதவும் ஒரு மிகச்சிறந்த டயட் உணவு முறையாக கருதப்படுகிறது; இந்த டயட்டை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்; இந்த டயட் உணவு முறையில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ள உணவுகளும், புரதங்கள் நிறைந்த உணவுகளும் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படும். இத்தகைய கீட்டோ டயட்டில் என்ன வகை பழங்களை சேர்க்கலாம் என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம். தண்ணீர் பழம் தண்ணீர்பழம் அதிக நீர்ச்சத்தையும், […]
இன்றைய காலகட்டத்தில் குளிர்சாதனப்பெட்டி இல்லாத வீடே இல்லை எனலாம்; அந்த அளவிற்கு நவீன உபகரண பொருட்களின் ஆதிக்கம் நமது அன்றாட வாழ்க்கையில் அதிகரித்துவிட்டது. இந்த நவீன உபகரணங்கள் பல நன்மைகளை அளித்தாலும், சில தீமைகளையும் புரிகின்றன; ஆனாலும் தீமைகளைக் காட்டிலும் அதிக நன்மைகளை நாம் பெறுவதால் இப்பொருட்களின் பயன்பாடு நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த பதிப்பில் நாம் நவீன உபகரணமான குளிர்சாதனப்பெட்டியில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று இப்பதிப்பில் பார்க்கலாம். […]
உடல் உறுப்புகளில் மிக முக்கிய உறுப்பு இந்த பெருங்குடல் தான். பெருங்குடலில் ஏதேனும் பிரச்சினை வந்தால் அது நமக்கு மிக பெரிய ஆபாய நிலையை குறிக்கிறது. இந்த அபாயத்திற்கு மூல காரணம் பெருங்குடலில் சேர்ந்துள்ள அழுக்குகள் தான். பல ஆண்டுகளாக நாம் சாப்பிட்ட தேவையற்ற பொருட்களின் சேர்வை தான் இந்த நச்சு தன்மைமிக்க அழுக்குகள். இதை அவ்வப்போது வெளியேற்றாவிடில் ஆபத்து நமக்கு தான். இதை மிக எளிய முறையில் சுத்தம் செய்து விடலாம். அந்த 5 வழிகளை […]
சின்ன பிள்ளைகளை “கொத்தமல்லி கொழுந்தே” என்று பல வீடுகளில் அழைப்பதுண்டு. இது கொத்தமல்லிக்கு கிடைத்த புனை பெயராகும், குழந்தைகளுக்கு கிடைத்த செல்ல பெயராகவும் இருக்கிறது. சமைத்து முடித்த பெரும்பாலான உணவுகளில் கொத்தமல்லியை இறுதியில் மணத்திற்காகவும் சுவைக்காகவும் மட்டுமே சேர்ப்பதாக நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால், இந்த காரணத்தை போல மேலும் சில காரணங்களும் உண்டு. கொத்தமல்லியை வைத்து உடல் எடை முதல் அதிகமாக சேர்ந்துள்ள கொலஸ்ட்ரால் வரை மிக எளிதாக குறைக்க முடியும். எப்படி இது சாத்தியப்படும் […]