மூக்கின் மேல் கரும்புள்ளிகள் அதிகமா இருக்குதா அதை எப்படி சரி செய்றதுன்னு தெரியலையா சுலபமான டிப்ஸ்

Published by
Priya

முகத்தில் இருக்கும்  முக்கிய உறுப்புகளில் மூக்கும் ஒன்று.மூக்கு தான் ஒருவரின் முக அழகை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மூக்கு நமது முகம் அழகாக இருப்பதற்கு மிக சிறந்த காரணியாக அமைகிறது.

மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று மூக்கின் மீது உருவாகும் கரும்புள்ளி மற்றும் மூக்கினை சுற்றிலும் ஏற்படும் கரும்புள்ளிகள் இந்த கரும்புள்ளிகள் நமது முக அழகை கெடுத்து விடும்.

மூக்கின் மீது கரும்புள்ளி ஏற்படுவதற்கான முக்கிய காரணம்:

மூக்கின் மீது கரும் புள்ளி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று எண்ணெய் பசையினை உடைய சருமம்.இவ்வாறு எண்ணெய் பசைகள் அதிகம் நம்முடைய சருமத்துளைகளில் படிந்து விடுவதால்  நாளடைவில் அது கரும்புள்ளிகளாக மாறிவிடுகிறது.

கரும்புள்ளிகளை போக்க சூப்பர் டிப்ஸ்:

முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்பட்டாலே நம்மால் பொறுத்து கொள்ள முடிவதில்லை.

இவ்வாறு மூக்கில் கரும்புள்ளிகள் உருவானால் நாம் முகஅழகு கெடுவதோடு மட்டுமல்லாமல் வெளியில் தலைகாட்டமுடியாமல் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகளை போக்கும் எளிய வழிமுறைகளை படித்தறிவோம் வாருங்கள்.

தக்காளி :

தக்காளி நமது முகத்தில் உள்ள அழகை பாதுகாப்பதில் மிக  வகிக்கிறது. தக்காளியில் உள்ள விட்டமின் ஏ சத்தும், பீட்டா கரோட்டீன் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க ஒரு சிறந்த எளிய மருந்தாகும்.

எனவே தக்காளியை கொண்டு முகத்தை தினமும் 15 நிமிடங்கள் மசாஜ் செய்து பின்னர் வெது வெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்கி,முகத்தில் தோன்றும் பல பிரச்சனைகள் விலகும்.

மேலும் முகம் பொலிவு பெறும்.மூக்கில் உள்ள கரும் புள்ளிகளுக்கும் இது மிக சிறந்த தீர்வாகும்.

முல்தானி மெட்டி:

 

முல்தானி மெட்டி பொடியுடன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்டாக தயார் செய்து வைத்து கொள்ளளவும்.

மூக்கில் கரும் புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி நன்கு காய்ந்தபின்பு முகத்தை நீரால் கழுவ வேண்டும்.

எண்ணெய் பொருட்கள் நிறைந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். மேலும் அதிகமாக எண்ணெய் பொருட்களை உணவில் சேர்த்து கொள்வதால் மூக்கில் கரும்புள்ளிகள் அதிகமாக உருவாகும்.

ஸ்ட்ராபெர்ரி:

 

ஸ்ட்ராபெர்ரியை  அரைத்து மூக்கில் கரும்புள்ளிகள் இருக்கும்  இடத்தில் தடவி   ஸ்கரப் செய்து  15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமம் புத்துணர்ச்சியுடன் மிளிரும்.மேலும் முகத்தின் அழகும் கூடும்.

கீரின் டீ  பொடி:

 

கீரின் டீ பொடி அல்லது இலையை நீரில் கலந்து கரும்புள்ளி உள்ள இடத்தில் போட்டு ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும்.இவ்வாறு தினமும் செய்து வர சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் முகத்திற்கு அதிக பொலிவை ஏற்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

பட்டை பொடி:

பட்டைபொடியுடன் சிறிதளவு தேன் சேர்த்து பேஸ்ட் செய்து இரவில் உறங்கபோவதற்கு முன்பு  மூக்கில் கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் போட வேண்டும். காலையில் எழுந்தவுடன் முகத்தை  நீரில் நன்கு கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வர மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் அழகு பெறும்.

 

Published by
Priya

Recent Posts

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

13 minutes ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

45 minutes ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

1 hour ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

1 hour ago

இரண்டாம் முறையாக கர்ப்பமான சிம்பு பட நடிகை.! சனா கானுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…

1 hour ago

INDvAUS: முதல் நாளில் செக் வைத்த ஆஸ்திரேலியா… தரமான பதிலடி கொடுத்த இந்தியா!

பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…

2 hours ago