நோய் சரியாகும்னு தான் மருத்துவமனைக்கு போறோம்…!! அடடே… அங்கேயும் நோய்தொற்று ஏற்படுமாம்…!!!
நமது உடலில் ஏற்படும் சிறு வியாதிகளுக்கு கூட நாம் மருத்துவமனைக்கு தான் செல்கிறோம். மருத்துவமனை எப்போதும் சுத்தமாக இருக்கும். என்றும், நமது நோய்களுக்கு தீர்வளிக்கும் இடமாகவும் மருத்துவமனையை எண்ணுகிறோம். ஆனால் நமது எண்ணத்திற்கு மாறாக தான் எல்லா செயல்களும் நடக்கிறது.
மருத்துவமனையில் நோய்தொற்று :
‘மருத்துவர்கள் நமக்கு சுகாதாரத்தை போதிப்பதாலோ, நமக்கு சிகிச்சை அளிக்கும் இடம் என்பதாலோ மருத்துவமனைகள் என்பவை நோய்க்கிருமிகள் அற்ற இடம் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ள முடியாது. பல நோய்த்தொற்றுகள் மருத்துவமனைகள் காரணமாகவும் வரலாம். இதற்கு Hospital acquired infection என்று பெயர்’’ என தொற்றுநோய் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நோய்தொற்று குறித்த விழிப்புணர்வு :
‘‘மருத்துவமனையில் பணிபுரிகிறவர்களுக்கு Hospital acquired infection பற்றிய தெளிவு இருக்கும். ஆனால், பொதுமக்களுக்கு இதுபற்றி தெரிவதில்லை. நோயாளியை அழைத்துச் செல்பவர்கள்,அடிக்கடி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கோ, சிகிச்சைக்கோ செல்கிறவர்கள, ஆகியோர் இதுபற்றி விழிப்புணர்வு பெறுவது அவசியம்.
மருத்துவமனை சார்ந்த தொற்று :
மருத்துவமனை சூழல் காரணமாக சிறிது காலத்திற்குள் ஏற்படுகிற தொற்றினை மருத்துவமனை சார்ந்த தொற்று என்று சொல்கிறோம். இதை Health care associated infection-ல் ஒரு வகை என்றே சொல்லலாம். ஒரு கர்ப்பிணி பிரசவத்துக்காக மருத்துவமனையில் இருந்துவிட்டு வீடு திரும்பிய பிறகு ஒரே மாதத்திற்குள் ஏதாவதொரு தொற்று ஏற்படலாம்.
நோய்தொற்றுக்கான காரணங்கள் :
நமது உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருப்பதும், கிருமிகள் அதிகமாக இருப்பதும் நோய்த் தொற்று ஏற்பட காரணமாக இருக்கிறது. Acinedobacter என்கிற கிருமி கடந்த 20 ஆண்டுகளாக ஆசிய நாடுகளில் உள்ள மருத்துவமனை சார்ந்த தொற்றுகளுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நோய்தொற்றுகளை தடுக்க வழிகள்:
மருத்துவமனை சார்ந்த தொற்றினைத் தடுக்க மருத்துவமனைகளை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். மருத்துவமனைகளில் கையுறைகளை பயன்படுத்துவதும், கைகளை மிகுந்த சுத்தத்துடன் வைத்துக் கொள்வதும் மிகவும் அவசியமாக கருதப்படுகிறது. நமது கைகளின் மூலமாகவே இதுபோன்ற பெரும்பாலான கொடிய நோய்க்கிருமிகளால் தொற்று ஏற்படுகிறது. பொதுமக்கள் அடிக்கடி தங்கள் கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் இதுபோன்ற தொற்றுகளைத் தடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.