வேலை பார்க்கையில் பாடல்களை கேட்பது நல்லதா? கெட்டதா?
இசைக்கு அடிமையாகாத மனிதர்களும் இப்புவியில் உண்டோ?! என்று கூறும் அளவுக்கு நம்மில் அனைவருமே இசையை நம் வாழ்வின் ஒரு அங்கமாக பார்க்கிறோம். எந்த ஒரு செயல் செய்தாலும் அதற்கேற்ற இசையை கேட்பதும், செய்யும் செயலை இசையோடு இரசித்து செய்வதும் பலரின் அன்றாட பழக்க வழக்கமாகும்.
இசை என்பதை எல்லா இடங்களிலும் கேட்கலாம்; ஆனால் பணிபுரியும் இடங்களில் வேலை செய்யும் பொழுது இசையை கேட்பது நல்லதா? கெட்டதா? என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்.
பலரின் பழக்கம்..!
பலர் இசையை கேட்டுக் கொண்டு பணிபுரிவதால், வேலையை விரைவாக, மன மகிழ்ச்சியோடு செய்ய முடிவதாக கூறுகின்றனர்; வேறு சிலருக்கோ வேலையின் நடுவில் காதில் ஒலிக்கும் இசை இரைச்சலாய் தெரிகிறது. இன்னும் சிலருக்கு வேலை பார்க்கும் பொழுது இசையைக் கேட்டால் தான் மூளையே வேலை செய்கிறது. இப்படி ஒவ்வொருவரும் தனக்கேற்ற பழக்க வழக்கத்தை – கருத்துக்களை வாழ்வில் கொண்டுள்ளனர்.
ஆராய்ச்சி!
வேலை பார்க்கையில் இசையை – பாடல்களை கேட்பது நல்லதா? கெட்டதா? என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், சில ஆச்சரியமான உண்மைகள் கண்டறியப்பட்டு உள்ளன. அவை என்ன்வென்றால், வேலை பார்க்கும் மக்கள் தங்கள் வேலைக்கேற்ற, தமது விருப்பத்திற்கேற்ற சரியான இசையை தேர்வு செய்து கேட்டு வந்தால், அது அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
எவ்வகை இசை?
வேலை பார்க்கையில் பெரும்பாலும் மகிழ்ச்சியை தரக்கூடிய பாடல்களை – இசையை கேட்பது, மனதிற்கு இதத்தைக் கொடுப்பதாகவும், இதனால் மனம் புத்துணர்ச்சி அடைந்து, மூளை சுறுசுறுப்புடன் செயலாற்றுவதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால், பணி புரிவோரின் உற்பத்தித் திறன் நன்கு மேம்படுவதாக கூறப்படுகிறது.
ஆகவே பணி புரியும் பொழுது, மன அழுத்தமாக உணரும் பொழுது கட்டாயம் மகிழ்ச்சி அளிக்கும் பாடல்களைக் கேளுங்கள்.. மனதை புத்துணர்ச்சி பெறச் செய்யுங்கள்!