வெறும் பதினைந்து நாட்களிலேயே உங்கள் முகக் கருமையை போக்க சில வழிகள்

Default Image
  • வெறும் பதினைந்து நாட்களிலேயே உங்கள் முகக் கருமையை போக்க சில வழிகள்.

இன்றைய நாகரீகமான உலகில் பலருக்கு பல வகையான பிரச்சனைகள் உள்ளன. ஆனால், இன்றைய இளம் தலைமுறையினருக்கு உள்ள மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்சனைகள் தான். அதிலும் தங்கள் மிகக் கருமையை போக்குவதற்காக பல வழிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related image

இதற்காக இவர்கள் பல செயற்கையான மருத்துவ முறைகளை கையாண்டு வருகின்றனர். இதனால், பல பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும். இதனால் இயற்கையான முறைகளை கையாளுவது சிறந்தது.

தற்போது இந்த பதிவில் சில நாட்களிலேயே மிகக் கருமையை நீக்கி, முகத்தை வெண்மையாக்கக் கூடிய சில இயற்கையான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

முட்டை பேஸ் பேக்

Image result for முட்டை பேஸ் பேக்

தேவையானவை

  • முட்டை
  • எலுமிச்சை சாறு

முட்டையின் வெள்ளைக் கருவுடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சூரிய வெளிச்சம் படும் இடத்தில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.

தக்காளி பேஸ் பேக்

Image result for தக்காளி பேஸ் பேக்

தேவையானவை

  • தக்காளி
  • எலுமிச்சை சாறு
  • கடலை மாவு

தக்காளியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் தக்காளியில் உள்ள லைகோபைன் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். மேலும் இந்த ஃபேஸ் பேக் மூலம் எவ்வித பக்க விளைவும் ஏற்படாது.

மைசூர் பருப்பு பேஸ் பேக்

Image result for மைசூர் பருப்பு பேஸ் பேக்

தேவையானவை

  • மைசூர் பருப்பு
  • கடலை பருப்பு
  • முல்தானிமெட்டி
  • மஞ்சள் தூள்
  • பப்பாளி கூழ்

மைசூர் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை ஒன்றாக அரைத்து பொடி செய்து, அதில் சிறிது முல்தானி மெட்டி, மஞ்சள் தூள், பப்பாளி கூழ் சேர்த்து கலந்து, முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகம் வெண்மையாகும்.

உருளைக்கிழங்கு

Image result for முட்டை பேஸ் பேக்

உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை தினமும் முகம் மற்றும் கருமையாக உள்ள இடத்தில் தடவி, உலர வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, சருமம் பொலிவோடும், வெண்மையாகவும் மாறுவதை நாம் கண்கூடாக காணலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்