ஒவ்வொரு இந்திய பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய சட்ட திட்டங்கள் – பாகம் 1
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாக திகழ்வது போல், ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான சட்ட திட்டங்களை கொண்ட நாடாகவும் திகழ்கிறது. இந்தியாவில் தற்சமயம் பெண்களுக்கான அநியாயங்கள் அதிகரித்து வருகின்றன; இதற்கு நாம் அரசையும், தகாத செயல்களில் ஈடுபடும் ஆண்களையும் குற்றம் சொன்னாலும், இந்த அநியாயங்கள் நிகழ நம்மிடையே நிகழும் அறியாமையும் ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.
இந்த பதிப்பில் ஒவ்வொரு இந்திய பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய சட்ட திட்டங்கள் பற்றி படித்து அறியலாம்.!
திருமண உரிமை
தான் விரும்பிய நபரை மணந்து கொள்ளும் உரிமை, இந்தியாவை சேர்ந்த ஒவ்வொரு பெண்ணிற்கும் வழங்கப்பட்டுள்ளது; பெற்றோராக இருந்தாலுமே பிடிக்காத ஒருவரை தனது மகளின் விருப்பமில்லாமல் திருமணம் செய்து வைக்க இயலாது.
மறுமண உரிமை
தனது மனைவி உயிருடன் இருக்கும் வரையில் அல்லது முறையாக விவாகரத்து பெறும் வரையில் ஒரு ஆணால், மற்றொரு பெண்ணை மணந்து கொள்ள இயலாது.
பெண்கள் தங்கள் கணவர் இவ்வகையில் ஏதேனும் அநியாயம் இழைத்தால், நிச்சயமாக காவல்துறையில் புகார் அளிக்கலாம். இந்த விதியில், முஸ்லீம் சமூகத்தினருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இரவு சிறை உரிமை
பெண்கள் ஏதேனும் தவறு இழைத்து அல்லது பெண்களை ஏதேனும் வழக்கு ரீதியாக விசாரணை செய்ய வேண்டுமெனில் அவர்களை பகல் நேரத்தில் மட்டுமே காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க வேண்டும்.
இரவு நேரத்தில் அவர்களை திருப்பி அனுப்பிவிட வேண்டும். முறையான ஆவணம் பின் மட்டுமே பெண்களை இரவு நேரத்திலும் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க முடியும்.
பாலியல் வன்புணர்வு
பெண்களை யாரேனும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றால் அவர்களின் மேல், பெண்கள் புகார் கொடுக்கலாம். பாலியல் வன்புணர்வு நேருகையில் தன்னை காத்துக்கொள்ள பெண்கள் கொலை புரியும் அளவு கூட செல்ல சட்டம் பெண்களுக்கு அனுமதி வழங்குகிறது.
உடலுறவு உரிமை
பெண்கள், அவர்களது விருப்பம் இருந்தால் மட்டுமே கட்டிய கணவரானாலும் அவருடன் உடலுறவு கொள்ளலாம்; பெண்களின் விருப்பத்தை மீறி உடலுறவு கொள்ள யாரேனும் முயன்றால், அவர்களின் மீது பெண்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம்.
விவாகரத்து உரிமை
பெண்களுக்கு உறவை தொடர விருப்பமில்லை எனில் எந்த நேரத்திலும் முறையாக முறையீடு செய்து, உறவை முறித்துக்கொள்ளவும் விவாகரத்து பெற்றுக் கொள்ளவும் பெண்களுக்கு உரிமை உண்டு.