ஒற்றை தலைவலியால் அதிகம் பாதிக்கபடுகிறீர்களா அப்ப இத கடைபிடியுங்கள்

Default Image

நம்மை தாக்கும் ஒருகொடிய நோய்களில் ஒன்று. ஒற்றை தலைவலி இதனால் நம்மில் பலர் அதிகம் பாதிக்கபடுகின்றனர். தலைவலி பெரும்வலி இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் அன்றாடம் சந்திக்கும் நோய்களில் ஒன்று.

  • ஒற்றை தலைவலியால் பாதிக்கபட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

எனவே ஒற்றை தலைவலி எதனால் ஏற்படுகிறது எனவும் அதில் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாப்பது என்றும் இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

 தூக்கம் :

ஒற்றை தலைவலி  ஏற்பட முக்கிய காரணம் ஒழுங்காக தூங்காதது தான்.சாதாரணமாக ஒரு நாளைக்கு மனிதன் குறைந்த பட்சம் 7இருந்து 8 மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம்.

தூக்கமின்மை பிரச்சனைகள் உடையவர்களுக்கு கண்டிப்பாக ஒற்றை தலைவலி ஏற்படும். எனவே அதிக தூக்கமும் ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும். எனவே அளவாக நாம் உறங்குவதும் முக்கிய காரணமாகும்.

உணவு :

 

நமது உடலில் உள்ள  இரத்த சர்க்கரை அளவு  குறைவதை முதலில் நமது
மூளை முதலில் உணர்கிறது. இதனாலும் ஒற்றை தலைவலி ஏற்படலாம்.பசி என்பது தலைவலிக்கு ஒரு பொதுவான காரணமாகும்.எனவே உணவு உட்கொள்ளுவது மிகவும் அவசியமானதாகும். இதனாலும் நமக்கு ஒற்றை தலைவலியை ஏற்படலாம்.

உடற்பயிற்சி :

 

உடற்பயிற்சி செய்வதால் தலைவலி குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது. .
சில நேரங்களில் அதிக உடற்பயிற்சி செய்வதாலும் ஒரு ஒற்றை தலைவலி ஏற்படலாம். உடற்பயிற்சியை மெதுவாக ஆரம்பித்து, படிப்படியாக அதிகரிக்க நினைவில் கொள்ளுங்கள்.

பருவநிலை மாற்றங்கள் :

 

பருவநிலை மாற்றங்களும் நமக்கு தலைவலியை ஏற்படுத்தகூடும். இந்த காரணங்களாலும் சிலருக்கு தூக்கம் வராமல் இருக்கும். இவ்வாறு தலைவலி அடிக்கடி வந்தால் நாம் முறையான சிகிக்சை பெறுவது மிகவும் அவசியம்.

இதனாலும் சிலருக்கு தலைவலி ஏற்படலாம். சிலருக்கு வெயிலில் சென்று வந்தால் அதிக படியான தலைவலி ஏற்படுத்தும். எனவே இந்தபருவ நிலைக்கு ஏற்றவாறு நாம் நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.

தண்ணீர் :

 

ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.உடல் வறட்சி அடைவதாலும் நாம் ஒற்றை தலைவலியை சந்திக்க நேரிடலாம். காபி மற்றும்  மது பானங்களை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

மாதவிடாய்  காலத்தில் :

சிலருக்கு மாதவிடாய் காலங்களில் அதிக அளவில் ஒற்றை தலைவலி ஏற்படலாம். மாதவிடாய் காலங்களில் அவர்கள் மிகவும் அசௌகரியமாக உணர்வதால் அவர்களுக்கு அதிக படியான தலைவலி ஏற்பட கூடும். எனவே இந்த சமயங்களில் பெண்கள் மனதை மிகவும் சந்தோசமாக வைத்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.மனதிற்கு சந்தோசம்  தர கூடிய செயல்களில் நாம் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது.

டிவி மற்றும் கம்ப்யூட்டர் :

 

டிவி மற்றும் கம்ப்யூட்டர் ஸ்கீரின்களை அதிக நேரம் பார்த்து கொண்டிருப்பதாலும் ஒற்றை தலைவலி பிரச்சனை ஏற்படலாம்.

எனவே அடிக்கடி சிறிது நேரம் இடைவெளி விட்டு டிவி மற்றும் கம்ப்யூட்டரை  பயன்படுத்துவது மிகவும் நல்லது. நீண்ட நேரம் அலுவலங்களில் வேலைபார்பவர்கள் சிறிது  நேரம் எழுந்து நடந்து விட்டு உட்காருவது மிகவும் நல்லது.இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராகுவதுடன் கண்களுக்கு ரெஸ்ட் கிடைக்கும்.

பற்கள் :

 

பற்களால் நாம் உணவை அரைக்கும் போது சிலருக்கு ஒற்றை தலைவலி ஏற்படலாம். தூக்கத்தில் நாம் தாடை யை கடிக்கும் போதும் இந்த பிரச்சனை ஏற்படலாம். எனவே இந்த பிரச்சனையை நாம் எவ்வாறு சரி செய்வது என நாம் பல் மருத்துவரை சந்தித்து தீர்வு காணலாம்.

மனஅழுத்தம் :

 

மன அழுத்தத்தை குறைக்க இசையில் நமது கவனத்தை செலுத்தலாம்.மற்றும் வேறு விதமான பொழுது போக்கு சார்ந்த நிகழ்வுகளில் நமது கவனத்தை செலுத்தலாம்.

அதிகப்படியான சத்தம் :

 

அதிகப்படியான சத்தம் மற்றும் அதிக ஒளிரும் விளக்குகள் ஒற்றை தலைவலிக்கான தூண்டுதல்கள் உள்ளன. மேலும் சிலருக்கு  துர்நாற்றங்களை சுவாசிப்பதாலும் ஒற்றை தலைவலி ஏற்படலாம். நமக்கு தலைவலி ஏற்படுத்த கூடியவற்றை தெரிந்து கொண்டு அவற்றைத் தவிர்ப்பதற்கு உகந்தவற்றைச் செய்யுங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்