முடி அதிகமாக வளரணுமா அப்ப இதெல்லாம் உங்க உணவில் சேர்த்து கொள்ளுங்கள்

Default Image

இன்றைய இளம் தலைமுறையினரை பாதிக்கும்  முக்கிய பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல் ஆகும். இந்த பிரச்சனை ஆண் ,பெண் என இருபாலர்களையும் பாதிக்கும் நோய்களில் ஒன்று. இதற்கு காரணம் நாம் சாப்பிடும் உணவுகளும் முக்கிய காரணமாகும்.

முடி வளர்ச்சியை தூண்டும் உணவுகள்:

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் ஊட்ட சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும். நாம் சாப்பிடும் உணவுகளில் பல இரசாயன பொருள்களும் கலந்து இருப்பதாலும் இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மேலும் நாம் ரசாயனங்கள் கலந்த  ஷாம்பூக்களை பயன் படுத்துவதாலும் நமது கூந்தல் பாதிப்படைந்து முடி உதிக்கிறது.மேலும் ஒரே ஷாம்பூக்களை பயன்படுத்தாமல் அடிக்கடி ஷாம்பூக்களை மாறி மாறி பயன்படுத்துவதாலும இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் முடி உதிர்விற்கு நாம் உண்ணும் உணவுகளும் முக்கிய காரணமாகும்.

முடி உதிர்வதை கட்டுபடுத்த நாம் அன்றாடம் உணவில் பல ஊட்டச்சத்து மிகுந்த பொருட்களை சேர்த்து கொள்ளவது மிகவும் நல்லது.

கறிவேப்பிலை :

 

கறிவேப்பிலை நார்சத்துவைட்டமின்மினரல் ஆகிய சத்துக்களை கொண்டுள்ளது. கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும்.  கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும்,அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் சளி பிரச்சனை தீரும்.

கறிவேப்பிலை இலையை அரைத்து  காய வைத்து அதை   தேங்காய் எண்ணெய்யில் போட்டு ஊறவைத்து தேய்த்து வந்தால் முடி உதிர்தலை கட்டுப்படுத்தி நரைமுடியையும் போக்கும்.

முட்டை :

 

முட்டையின் வெள்ளைகருவை எடுத்து  தலைக்கு குளிக்கும் நாட்களில் நன்றாக தேய்த்து  குளித்து வர முடிக்கு ஊட்டம் அளிப்பதோடு முடி வளர்ச்சிக்கும் இது அருமருந்தாகும். முட்டையை தினமும் உணவில் சேர்த்து வர முடி வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீன் மற்றும் பயோட்டீன் சத்துக்களை கொடுக்கிறது.இவ்வாறு முட்டையை உணவில் சேர்த்து வர முடிஉதிர்வு ஏற்படாமல் தடுக்கலாம்.

மீன் :

 

 

மீனில் ஒமேகா 3 சத்து நிறைந்து காணப்படுவதால் இது முடிவளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். தினமும்  மீனை உணவில் சேர்ந்து கொள்வதால் முடிக்கு தேவையான புரதசத்தை கொடுக்கிறது. மீனை தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடலில் எந்தவிதமான நோய்களும் நம்மை அண்டாது.

பசலை கீரை :

பசலை கீரையில் வைட்டமின் A, மற்றும் இரும்புச்சத்துகள் மிகுந்து காண படுகிறது.இதனை தினமும் உணவில் சேர்த்து வருவதால் முடிவளர்ச்சிக்கு பேருதவி புரிவதோடு முடி உதிர்வதையும் தடுக்கிறது.

நட்ஸ் :

 

உடலுக்கு தேவையான ப்ரோட்டீன்,பயோட்டின் மற்றும் இரும்பு சத்துக்களை இவை  கொண்டிருப்பதால் இவை முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு முடி வளர்ச்சிக்கும் உதவி புரிகிறது.மேலும் இது முடி வறட்சி அடைவதை தடுக்கிறது.

ஓட்ஸ் :

 

ஓட்ஸ் முடி வளர்ச்சிக்கு தேவையான மெலனின் உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முடி வளர்ச்சிக்குத் தேவையான பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் ஆகிய சத்துக்கள் ஓட்ஸில் நிறைந்து காணப்படுகிறது.எனவே தினமும் உணவில் ஓட்ஸ் சேர்த்து வந்தால் முடி வளர்ச்சி அடையும். முடி உதிர்வு தடைபடும் .மேலும் இது முடிக்கு நல்ல கருமை நிறத்தை கொடுக்கிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்