நெய்யை இப்படி சாப்பிடுவதால் உடல் எடை மற்றும் தொப்பையை 2 வாரத்திலே குறைக்கலாம்.!
கிருஷ்ணர் என்றாலே வெண்ணெய்க்கு தான் மிகவும் பிரசித்தி பெற்றவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெண்ணையை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த வெண்ணெய்யில் இருந்து தயாரிக்கும் ஒரு உணவு பொருள் தான் நெய். பலவித சமையலில் நெய் தான் பிரதான உணவு. நெய்யை சமையலுக்கு பயன்படுத்தி சாப்பிடுவதால் உடலுக்கு அதிக ஆரோக்கியம் கிடைக்கும்.
சாப்பிட கூடிய உணவில் நெய்யை கலந்து சாப்பிட்டு வந்தால் பல்வேறு உடல்நல கோளாறுக்களில் இருந்து உங்களை காத்து கொள்ளலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் நெய் முக்கிய மருந்தாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட நெய் உடல் எடை பிரச்சினைக்கும் தீர்வு காண்கிறது. அது எப்படி சாத்தியப்படுகிறது என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.
செரிமானம்
உடல் எடை அதிகரிப்பதற்கு செரிமான கோளாறும் முக்கிய காரணம்.1 ஸ்பூன் நெய்யை 1 கப் பாலில் கலந்து, தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் செரிமான கோளாறே ஏற்படாது. குடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நெய் பெரிதும் பயன்படுகிறது.
சர்க்கரை நோய்
வெறும் அரிசி மற்றும் சப்பாத்தி சாப்பிடுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதுவே சாப்பிட கூடிய உணவில் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். ஆரோக்கியமாக சர்க்கரை நோயாளிகள் வாழ்வதற்கு நெய் உதவும்.
தொப்பை
தொப்பையின் கொழுப்பை குறைக்க அரும்பாடு படும் அன்பர்களுகளே! தினமும் சாப்பாட்டில் 1 அல்லது 2 ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொப்பையின் அளவு குறையும். காரணம் இதில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் தான். இவை உடலுக்கு நற்பயன்களை தர கூடிய அமிலங்கள் ஆகும்.
சருமம் அழகு பெற
முகம் என்றுமே அழகாகவும் பொலிவாகவும் இருக்க விரும்பினால் அதற்கு நெய் சிறந்த உணவாக இருக்கும். மங்கிய முகத்தை 1000 வாட்ஸ் பல்ப் போல பிரகாசமாக எரிய வைக்கும் தன்மை நெய்யிற்கு உள்ளது.
தேவையான பொருட்கள்…
2 ஸ்பூன் நெய்
2 ஸ்பூன் கடலை மாவு
1 ஸ்பூன் மஞ்சள்
நீர்
பயன்படுத்தும் முறை…
நெய்யுடன் கடலை மாவு மற்றும் மஞ்சள் சேர்த்து கலக்கி கொள்ளவும். அடுத்து இவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் பூசவும். 20 நிமிடம் முகத்தை காய விட்டு, அதன் பின் கழுவவும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.