அத்திப்பழத்தை இந்த உணவோடு சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை 1 மாதத்திற்குள் குறையும்..!

Default Image

உடல் எடை அதிகரிப்பால் பலரும் இன்று அவதிப்படுகின்றனர். எடையை குறைக்க ஜிம்மிற்கும், பலவித பூங்காக்களுக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக, இன்று படை எடுத்து வருகின்றனர். இத்தகைய சூழலை சமாளிக்க சீரான உணவுகள் இருந்தாலே போதும். உணவு முறை, சுற்றுசூழல், உடற்பயிற்சி போன்றவை ஆரோக்கியமான நிலையில் இருந்தாலே நம்மால் அதிக காலம் உடல் நல கோளாறுகள் இல்லாமல் வாழ இயலும்.

இந்த பதிவில் உடல் எடையை குறைக்க அத்திப்பழத்தை எந்த உணவோடு சேர்த்து சாப்பிடலாம் என்பதையும், அவ்வாறு சாப்பிடுவதால் கிடைக்கும் மேலும் பல நற்பயன்களையும் அறிந்து கொள்ளலாம்.

நார்சத்து
மற்ற பழங்களை போல தான் அத்தியும் உள்ளது. இதில் அப்படி என்ன நன்மை வந்து விட போகிறது என நினைக்கும் பலருக்கும் இதில் உள்ள சத்துக்களையும் தாதுக்களையும் பற்றி தெரிவதில்லை என்றே அர்த்தம். அத்தியில் அதிக அளவில் நார்சத்து இருப்பதால் செரிமானத்தை விரைவாக செய்து விடும். இதனால் உடல் எடை கூடும் பிரச்சினை தவிர்க்கப்படுகிறது.

கலோரிகள்
அத்திப்பழத்தை அன்றாடம் காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் தசைகள் வலிமை பெறும். மேலும், உடலில் இருக்க கூடிய அதிகபடியான கலோரிகள் குறையும். ஆதலால், உடல் எடை குறைய தொடங்கும். உடல் எடை குறைப்பிற்கு அத்திப்பழம் சிறந்த தீர்வு.

இதய ஆரோக்கியம்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அத்திப்பழத்தில் நிறைந்துள்ளது. எனவே, இதை சாப்பிடுவதால் நேரடியாகவே உங்களின் இதயமானது நோய்களில் இருந்து பாதுகாக்கப் படுகிறது. அத்துடன் மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் முதலிய அபாயங்களில் இருந்தும் காக்கும்.

கொலஸ்ட்ரால்
உடல் எடை கூடுவதற்கு மிக முக்கிய காரணம் கொலஸ்ட்ராலும் தான். கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைத்து கொள்ள அத்திப்பழம் வழி செய்கிறது. தினமும் அத்தியை காலையில் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ராலின் அளவு குறையும். மேலும், தொப்பையும் இதனால் குறைய கூடும்.

எவ்வாறு சாப்பிடலாம்..?
அத்திப்பழத்தை அப்படியே சாப்பிடுவதால் உடலுக்கு முழு பலனும் கிடைக்கும். மேலும், உலர்ந்த அத்தியை தேனில் ஊற வைத்து தினசரி வெறும் வயிற்றில்சாப்பிடுவதால் பலவித நன்மைகள் உண்டாகும். அவற்றில் மிக முக்கியமானது உடல் எடை குறைப்பு தான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்