நடனப்பயிற்சிகளின் மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி என்று அறிவீரா?

Default Image

நம்மில் பலர் எடையை குறைக்க மிகவும் போராடி வருவதுண்டு; ஆனால் எடையை குறைப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் இல்லை நண்பர்களே! என்ன எடையை குறைப்பது கடினமானதல்ல என்று கூறியதை கேட்டதும் வியப்பாக உள்ளதா?

ஆம் நண்பர்களே! உடல் எடையை எளிய நடன பயிற்சிகளின் மூலம் எளிதில் குறைத்து கட்டுக்கோப்பான உடலமைப்பை பெற்று விடலாம். இந்த பதிப்பில் நடனப்பயிற்சிகளின் மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி என்று படித்து அறியலாம்.

ஜும்பா நடனம்

உடல் எடை குறைப்பில் மிகவும் பிரசித்தி பெற்ற ஜும்பா நடன முறையை தொடர்ந்து செய்து வந்தால், எளிதில் உடல் எடையை குறைத்து விடலாம். இந்த நடன பயிற்சியை யு டியூபில் கிடைக்கும் காணொளிகளை பார்த்து எளிதில் கற்றுக்கொண்டு, உடல் எடையை குறைக்க முயலலாம்.

பஞ்சாபி பாடல்கள்!

பஞ்சாபி பாடல்களுக்கு ஏற்ற பஞ்சாபி நடனத்தை சரியாக, தொடர்ச்சியாக ஆடி வந்தால், உடல் எடையை மிகக்குறைந்த நேரத்தில் எளிதில் குறைத்து விடலாம்.

தொப்பை நடனம்

பெல்லி டான்ஸ் என்று சொல்லக்கூடிய வயிறு அல்லது தொப்பை நடனத்தை முறைப்படி கற்றுக்கொண்டு, தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு செய்து வந்தால், உடல் எடை குறைப்பில் நல்ல மாற்றத்தை காணலாம்.

ஹிப் ஹாப் நடனம்

ஹிப் ஹாப் பாடல்களை ஒலிக்க செய்து அவற்றிற்கு ஏற்றாற்போல், வியர்வை சொட்டும் அளவுக்கு தொடர்ந்து, தினமும் நடன பயிற்சி புரிவது உடல் எடை குறைப்பிற்கு நன்கு உதவும்.

குத்துப்பாடல்கள்

நம் பாரம்பரிய குத்துப்பாடல்களுக்கு தெறிக்க விடும் வகையில், தினசரியாக ஒரு குறிப்பிட்ட நேரம் நடனம் புரிந்தால், எளிதில் உடல் எடை குறைந்து விடும்.

இந்த நடன முறைகள் நிச்சயம் பலனளிக்கும்; கட்டாயம் முயற்சித்து பாருங்கள்!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்