பாயாசத்தை விரும்பாத நபர்களே இருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாயாசத்தை விரும்பி உண்பார்கள். மேலும் விழாக்காலங்களில் பாயாசம் இல்லாத விருந்தே இருக்க முடியாது.
தெகிட்டாத சுவையில் பன்னீர் பாயாசம் செய்வது எப்படி என இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம்.
பன்னீர் – அரை கப் (க்ரம்புல் செய்தது)
பால் – இரண்டு கப்
சோள மாவு – 1 டீஸ்பூன்
முந்திரி – 5
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
கண்டேன்ஸ்டு மில்க் (அ) சர்க்கரை – கால் கப்
குங்குமபூ – சிறிதளவு
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் காய்ந்ததும் மிதமான தீயில் அடுப்பை வைத்து, அதில் பன்னீர் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கைவிடாமல் கிளறவும். சோள மாவை கரைத்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
அந்த கரைசலை ஊற்றி 1 நிமிடம் நன்றாக கிளற வேண்டும். பின்பு கண்டேன்ஸ்டு மில்க் (அல்லது) சர்க்கரை சேர்த்து இடைவிடாமல் கிளற வேண்டும். அதற்கு பிறகு குங்குமபூ, ஏலக்காய் தூள், முந்திரி துண்டு ஆகியவற்றை சேர்த்து கிளறி கொதித்தவுடன் இறக்கவும்.
பால் காய்ந்தவுடன் ஐந்து நிமிடங்கள் மட்டும் வைத்தால் போதுமானது அதற்கு மேல் வைக்க கூடாது.இப்போது சூடான பன்னீர் பாயாசம் ரெடி.
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய…
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…