தித்திக்கும் மேங்கோ சேகோ எப்படி செய்யலாம்
மாம்பழம் நமது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும் பழ வகையாகும்.இது முக்கனிகளில் முதன்மையான கனியாக விளங்குகிறது. மாம்பழத்தை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது.அதிலும் குழந்தைகள் மாம்பழத்தை பார்த்தால் விடமாட்டார்கள்.
- தித்திக்கும் மேங்கோ சேகோ எப்படி செய்யலாம்?
சில குழந்தைகள் மாம்பழத்தை விரும்ப மாட்டார்கள்.அவர்களும் மாம்பழத்தை சாப்பிட இந்த முறையை பயன்படுத்தலாம். தித்திக்கும் மேங்கோ சேகோ எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்து தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி – அரை கப்
மாம்பழம் – ஒரு கப் (தோல் நீக்கியது)
பால் – அரை லிட்டர்
குங்குமபூ – இரண்டு சிட்டிகை
சர்க்கரை – அரை கப்
செய்முறை:
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பின்பு அதில் நன்றாக கழுவிய ஜவ்வரிசியை போட்டு தட்டை வைத்து மூடி அடுப்பை அனைத்து விட வேண்டும். இதனை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பாலை காய்ச்சி எடுத்து வைத்து கொள்ளவும்.
சிறுசிறுதுண்டுகளாக நறுக்கிய மாம்பழம், காய்ச்சியப்பால் , சர்க்கரை, குங்குமபூ ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு, இதனுடன் ஜவ்வரசி சேர்த்து கலக்கி ஒரு கப்பில் ஊற்றி பரிமாறவும். இப்போது தித்திக்கும் சுவையுடன் மேங்கோ சேகோ ரெடி.