இனிமையான இல்லமாக அமைய வீட்டை எப்படி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் தெரியுமா ?
- வீட்டை சுத்தமாக பராமரித்துக் கொள்ளவது எப்படி?
” அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பது, மனித வாழ்க்கையைக் குறித்து கூறப்பட்டாலும், நமது முகத்தை பார்த்து தான், அகத்தை கணக்கிடுவார்கள். அது போல தான் நமது இலத்தின் தூய்மையை பார்த்து தான் நமது தூய்மையை கணக்கிடுவார்கள்.
இனிமையான இல்லம்
நம்முடைய வாழ்வில் நமக்கு கிடைக்கும் அனைத்துமே இறைவன் நமக்கு கொடுத்த வரம். ( பொருட்கள், உடைமை,வீடு ….) இவற்றை முறைப்படி நாம் சுத்தமாக வைத்து கொண்டால் தான் இல்லம் ஒரு இனிமையான இல்லமாக அமையும்.
நமது வீடு சுத்தமாக ,நமது மனமும் நிறைந்து விடும், நம் இல்லத்தை மற்றவர்கள் பார்க்கும் போது, நமக்கென்று அவர்களிடத்தில் தனி மரியாதை உண்டாகும். சொந்த ,வாடகை வீடோ, பழைய வீடோ, புது வீடோ எந்த வீடாக இருந்தாலும்,அந்த வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது அந்த வீட்டில் கடமை.
குழந்தைகளின் பங்கு
நமது குடும்பத்தில் உள்ள குழந்தைகள் நாம் சிறு வயதில் இருந்து வளர்கிறோமோ அவ்வாறு தான் அவர்களும் வளருவார்கள். தான் முன் மாதிரியாக இருக்க வேண்டும். தாயாக இருந்தாலும் சரி, தந்தையாக இருந்தாலும் சரி இருவரும் இணைந்தே வீட்டு வேலைகளை பார்ப்பது மிக சிறந்தது.
ஏனென்றால், ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற வேறுபாடு பார்ப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் தான் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதை தவிர்க்க வேண்டும். ஆண்களும் இந்த வேலைகளை செய்ய வேண்டும் என்று குழந்தைகளுக்கு வளர்க்க வேண்டும். அது ,அவர்களுக்கு முன்மாதிரியாகவும் வாழ வேண்டும்.
சரியான இடத்தில் பொருட்கள்
குழந்தைகளை மிகப்பெரிய வேலைகளை கொடுக்காமல், முதலில் தங்களது கடமைகளை சரியாக செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். காலையில் எழுந்தது, தங்களது படுக்கைக்குரிய பொருட்களை எடுத்து சரியான இடத்தில் வைக்க வேண்டும்.
அழுக்குத்துணிகளை அதற்குரிய இடத்தில போட வேண்டும் என்றும், தங்களுக்குரிய வேலைகளை சரியாக செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் ஒருவர் மட்டுமே பார்க்காமல், குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களும் வேலைகளை பழக்கத்தய் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வாழ்வில் இன்றியமையாத இல்லத் தூய்மை
ஆகவே, இல்லத் தூய்மை என்பது மனிதனுடைய வாழ்க்கையில், மிகவும் இன்றியமையாத ஒன்று. நம் இல்லத்தை பொறுத்து தான் நமது வாழ்க்கை அமையும் எனவே, வீட்டில் அனைவரும் பகிர்ந்து, திட்டமிட்டு செய்து, வீட்டை தூய்மையா வைத்துக் கள்ள முயல்வது மிகவும் சிறந்தது..