எந்தவொரு விஷயத்திலும் ஒருதலைபட்சமாக முடிவெடுக்கிறீர்களா? இப்பழக்கத்தை மாற்றுவது எப்படி?

Default Image

உண்மை நிலை அறியாமல் எந்தவொரு விஷயத்திலும் ஒரு தரப்பை ஆதரித்து அல்லது உண்மை அறிந்திருந்தும் ஒருதலை பட்சமாக முடிவெடுக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு இருப்பதுண்டு; இந்த பழக்கம் உறவுகளைக் காப்பாற்ற, சுய லாபம் போன்ற காரணங்களால், வாழ்வின் ஏதேனும் ஒரு சூழலில் ஏற்பட்டுவிகிறது.

ஏற்பட்ட பழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல் அதை அப்படியே தொடர்வதால், இது வழக்கமாகிவிடுகிறது; இப்பழக்கம் உள்ள நபர்கள் நிச்சயமாக அதை மாற்றிக்கொள்ள முயல வேண்டும். இதை எப்படி மாற்றுவது என்பதற்கான சில எளிய வழிகள் இந்த பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன, படித்து பயனடையுங்கள்.

கூர்ந்து கவனியுங்கள்

எந்தவொரு விஷயம் தொடர்பான முக்கிய முடிவு எடுக்கும் பொழுதும், இறுதி முடிவை எடுக்கும் முன் நன்கு சிந்தியுங்கள்; பின் முடிவினை எடுங்கள். நீங்கள் எடுத்த முடிவு ஒருதலைபட்சமாக உள்ளதா என்பதை அறிய, முடிவெடுத்த பின் யார் பலனடைகிறார்கள், யார் பக்கம் நியாயம் உள்ளது.

எடுத்த முடிவு அந்த விஷயத்திற்கு நியாயம் செய்கிறதா என்பதை நன்கு ஆராய்ந்து பார்த்தால், உண்மை நிலை உங்களுக்கே விளங்கும்.

தவறாகி விட்டால்..

எடுத்த முடிவு நியாயம் வழங்கவில்லை எனில், அதை சரிசெய்ய கட்டாயம் நீங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்; இல்லையேல் இம்மாதிரியான ஒருதலைபட்ச முடிவுகளால் ஏற்படும் பலன்கள் தற்காலிக சுகம் கொடுத்து, பின்னால் குழி பறித்து விடும். ஆகையால் கூர்ந்து கவனித்து முடிவெடுங்கள்.

திட்டமிட்டு செயல்படுங்கள்

ஏதேனும் ஒரு சூழலில் நீங்கள் ஒருதலைபட்ச முடிவு எடுத்தே ஆக வேண்டும்; இல்லையேல் அது உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திவிடும் எனும் நிலையில், அச்சூழலை எப்படி இழப்பு ஏற்படாமல் சமாளிப்பது என நன்கு சிந்தித்து, திட்டமிட்டு செயல்படுதல் அவசியம்.

உங்களுக்கு அச்சூழலை தீர்க்க எந்த ஒரு சரியான வழியும் கிடைக்கவில்லை எனில், நம்பகத்தன்மை கொண்ட நண்பர்களின் உதவியுடன் திட்டமிட்டு விவேகத்துடன் எந்தவொரு சூழலையும் சமாளிக்க முயலுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்