தொப்பையினால் அவதிபடுவோர் அதிகமாக உள்ளனர். பத்தில் 5 பேருக்கு தொப்பை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுதல், ஒரே இடத்தில் நாள் கணக்கில் உட்கார்ந்திருத்தல், உடற்பயிற்சி இன்மை இது போன்ற காரணிகள் தான் தொப்பைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதற்கு தீர்வே இல்லையா என்று ஆவலாக இருக்கும் உங்களுக்கான, தீர்வை இஞ்சியும் சீரகமும் தருகிறது. இதை தொடர்ந்து குடித்து வந்தால் மிக எளிதாக தொப்பையை குறைத்து விடலாம். மேலும், இதனால் பல்வேறு பயன்களும் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்பதை இனி அறியலாம்.
சீரகத்தின் பயன்கள்
பொட்டாசியம், இரும்புசத்து, நார்சத்து, வைட்டமின் சி, ஈ, கே போன்ற பலவித ஊட்டச்சத்துக்கள் சீரகத்தில் உள்ளதாம். சமையலில் இதன் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். உணவில் தனியாக சீரகத்தை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை விட பல மடங்கு இதன் ஆற்றல் இஞ்சியுடன் சேரும் போது அதிகரிக்கும்.
இஞ்சியின் பயன்கள்
இந்திய உணவின் மிக முக்கிய இடம் இஞ்சிக்கு எப்போதுமே உண்டு. இஞ்சியை உணவில் சேர்த்து கொண்டால் ஏராளமான பயன்கள் கிடைக்கும். வெறும் இஞ்சியை சாப்பிடுவதை விட சீரகத்தோடு சேர்த்து சாப்பிட்டால் இதன் பலன்மேலும் உயரும் என ஆயுர்வேத குறிப்புகள் சொல்கின்றன.
தேவையான பொருட்கள்
1 ஸ்பூன் சீரகம்
1 இஞ்சி
500 மி.லி தண்ணீர்
1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
அரை ஸ்பூன் ஏலக்காய் பொடி
தயாரிக்கும் முறை
முதலில் நீரை கொதிக்க விட்டு அதனுள் சீரகம், நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்க்கவும். 500 மி.லி நீர் 250 மி.லி வரும் வரை இதை கொதிக்க விடவும். பிறகு இதனை இறக்கி கொண்டு எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். தேவைக்கு சிறிது ஏலக்காய் சேர்த்து கொள்ளலாம்.
எவ்வாறு வேலை செய்கிறது?
இந்த நீரை தினமும் காலையில் குடித்து வந்தால் தொப்பை 10 நாட்களுக்குள் குறையும். கூடுதலாக உடல் எடையும் இதனால் குறைந்து விடும். உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புகளும் இந்த நீரால் கரைந்து வெளியேறி விடும். எதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்டோருக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும்.
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…