ஒரு பெண்ணிற்கு அவளது வாழ்வில் மிக முக்கிய காலமாக விளங்குவது கர்பகாலம். இந்த கால கட்டத்தில் ஒரு பெண் உடல் அளவில் பல மாற்றங்களை சந்திக்கிறாள். மேலும் அந்த காலகட்டத்தில் அவள் மன ரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.
இது மட்டுமல்லாமல் கர்ப்பகாலத்தில் பெண்களின் ஹார்மோன்கள் மாற்றமடைவதால் சருமத்திலும் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.இதனால் சருமம் பலவகையான பாதிப்புகளுக்கு உள்ளாக கூடும்.அந்த வகையில் கர்பகாலத்தில் பெண்கள் எவ்வாறு நமது சருமத்தை பாதுகாக்கலாம் என்பதனை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
கர்பகாலங்களில் நமது உடலில் சில ஹார்மோன்கள் சீரற்று காணப்படுவதாலும் இருப்பதாலும் பல வகையான பாதிப்புகள் நமது சருமத்தில் நேரிடலாம்.
அந்த வகையில் நமது உடலில் முக்கியமான சுரப்பியாக விளங்கும் மெல்சமா ஹார்மோனல் சீரற்று இருப்பதாலும் நமது சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.
இந்த ஹார்மோன் சீரற்று இருப்பதால் நமது உடலில் உள்ள நெற்றி, மூக்கு ஆகிய இடங்களில் ஒரு வகையான நிறம் மாற்றம் ஏற்படக்கூடும்.
இந்த வகையான பாதிப்பு ஒரு சில பெண்களுக்கு ஏற்படக்கூடும். மேலும் வயிற்று பகுதிகளில் கட்டிகள் மற்றும் பருக்கள் ஏற்படலாம்.
சில பெண்களுக்கு அரிப்புகள் ஏற்படலாம் அது குழந்தை பிறந்ததற்கு பிறகு சரியாகி விடும்.
கர்பகாலத்தில் நாம் நமது உடல் ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை காட்டாமல் நாம் சரும ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது.எனவே நாம் கர்பகாலத்தில் நாம் நமது சருமத்தை எவ்வாறு பாதுகாக்கலாம்.
கர்பகாலத்தில் நாம் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். கர்பகாலத்தில் நாம் தண்ணீரை அதிகமாக குடிப்பதால் சருமம் வறட்சி அடைவது தடுக்கபடும்.
மேலும் உடலில் எப்போதும் நீர் சத்து குறையாமல் இருக்க தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். மேலும் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு ஜூஸ் போட்டு குடிக்கலாம். இது உடல் மற்றும் சருமத்தை பாதுகாக்க உதவும்.
கர்பகாலத்தில் சன் ஸ்கீரீன் பயன் படுத்துவது மிகவும் அவசியமாகும். கர்பகாலத்தில் நாம் சன் ஸ்கீரீனை அதிகம் பயன்படுத்துவதால் சருமம் வறட்சி அடைவது தடுக்கபடுவதோடு சருமத்தை எப்போதும் ஈரபதத்துடன் வைத்து கொள்ள உதவியாக இருக்கும்.
கர்பகாலத்தில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும்.இவ்வாறு நாம் அடிக்கடி முகத்தை கழுவுவதால் நமது சருமம் எண்ணெய் பசை நீங்கி முகம் அழகு பெறும்.
கர்பகாலத்தில் முகத்திற்கு பேசியல் மசாஜ் செய்ய வேண்டியது அவசியம். மேலும் கர்பகாலத்தில் முகத்திற்கு அடிக்கடி பேசியல் செய்வது மிகவும் நல்லது.கர்பகாலத்தில் பப்பாளி பழத்தை பயன்படுத்தி பேசியல் செய்வது மிகவும் நல்லது.
இது சருமத்திற்கு வறட்சியை ஏற்படுத்தாமல் எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள உதவியாக இருக்கும்.
தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன்…
டெல்லி : நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நீட் (NEET) எனும் பொது நுழைவு தேர்வு…
குஜராத்: ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா…
சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால்…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டத்தில் நடிகை 'சன்னி லியோன்' பெயரில் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு மாதந்தோறும் பணம்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரே…