வெயில் காலங்களில் நமது உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்க சில வழிமுறைகள்
- வெயில் காலங்களில் நமது உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்க சில வழிமுறைகள்.
கோடைகாலம் துவங்கி விட்டாலே நமக்கு உடல் ரீதியான பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நாம் பல வகையான வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது இந்த பதிவில் கோடைகாலத்தில் நமது உடல் துர்நாற்றத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
அருகம்புல் சாறு
தினமும் காலையில் எழுந்தவுடன் அருகம்புல் சாற்றினை குடித்து வந்தால், அந்த சாற்றில் உள்ள குளோரோஃபில் வியர்வை நாற்றத்தைப் போக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
தேன்
வெயில் காலங்களில் ஏற்படும் உடலதுர்நாற்றத்தை போக்க, தினமும் நாம் குளித்து முடித்த பின்பு, ஒரு டேபிள் ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, இறுதியில் உடலில் ஊற்றிக் கொண்டால், உடல் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.
சுத்தமான ஆடைகள்
வெயில் காலங்களில் நாம் சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். இக்காலங்களில் நாம் அதிகமாக கார்ட்டன் ஆடைகளை அணிவதை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும். கார்ட்டன் ஆடைகள் வியர்வையை எளிதில் உறிஞ்சி, துர்நாற்றத்தை விரைவில் வெளியேற்றிவிடும்.
ரோஸ் வாட்டர்
கோடைகாலங்களில் நமது உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்க, தினமும் குளிக்கும் போது, அந்த நீரில் ரோஸ் வாட்டர் கலந்து குளித்து வந்தால், உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
தக்காளி சாறு
கோடைகாலங்களில் நாம் குளிக்கும் போது, ஒரு கப் தக்காளி சாற்றினை குளிக்கும் தொட்டியில் ஊற்றி, அதில் நீரை நிரப்பி, அதனுள் 15 நிமிடம் உட்கார்ந்தால், வியர்வை நாற்றமானது வெளிவராமல் இருக்கும்.
புதினா
வெயில் காலங்களில் குளிக்கும் நீரில் சிறிது புதினா இலையை சேர்த்து ஊற வைத்து, குளித்து வந்தால், உடலில் உள்ள கிருமிகள் நீங்கி, உடல் புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் இருக்கும்.