வெயில் தொடங்கியாச்சு…. மக்களே கவனமா இருங்க…..
- வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகம்.
- வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள சில வழிகள் உள்ளது.
பருவகால மாற்றம் என்பது இயற்கையான ஒன்று தான். மக்கள் குளிர்கால மாற்றங்களை கூட தாங்கி கொள்கிறார்கள். ஆனால், வெயில் காலங்களில் ஏற்படும் மாற்றங்களை மக்களால் தாங்கி கொள்ள முடிவதில்லை.
வெயில் காலம் தொடங்கி விட்டாலே பல நோய்கள் நம்மை தேடி வருகின்றன. இந்த நோய்களால் நமக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணமே, வெயிலை தாங்கிக்கொள்ள கூடிய சக்தி உடலில் இல்லாதது தான்.
வெயிலின் தாக்கம்
வெயில் காலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் உடலில் இருந்து வியர்வை மூலம் நீர்போக்கு அதிகமாக இருக்கும். அதிகமான நீர்போக்கினால் உடல் சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் உடலில் போதுமான நீர் இல்லாமல் போவதால் மயக்கம், அஜீரனம், மற்றும் சரும பிரச்சனைகள் வரக்கூடும். இதைத் தடுக்க நீர் மற்றும் சரியான உணவுகள் அருந்துவது அவசியம்.
மேலும், நமது உடல் ஆரோக்கியம் குளிர்ச்சியான நிலையில் காணப்பட்டால், அதிகமாக நோய்களை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
தண்ணீர்
வெயில் காலங்களில் உடலில் நீர் சத்து குறைவாக காணப்படுமானால், நோய்கள் நம்மை எளிதாக தாக்கி விடும். வெளியில் வேலைக்கு செல்பவர்கள் உடலில் நீர் வறட்சி ஏற்படும். இதுபோன்ற சமயத்தில், உடலில் நீர் வறட்சியாகாமல் இருக்க, தேவையான அளவு நீரை பருக வேண்டும்.
மேலும், நீர்சத்து உள்ள பல வகைகள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு வந்தால், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நாம் எங்கு சென்றாலும், கையில் தண்ணீர் பாட்டிலை வைத்திருப்பது மிகவும் நல்லது.
இளநீர்
நமது உடலில் நீர் சத்து குறைவதால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் ஒருவருக்கு அதிகமாக வியர்க்கும் வேலையில் அவருக்கு உடலில் இருந்து நீர் குறைவதோடு மட்டுமல்லாமல் உடலில் உள்ள எலெக்டரோலைட்ஸ், சோடியம் மற்றும் பொடாசியம் அளவும் குறையக் கூடும்.
இளநீரில், அதிக அளவு பொடாசியம் உள்ளது. மேலும், எலுமிச்சை ஜூஸ் குடித்தால் வைட்டமின் சி உடல் சத்துக்கு உதவும். இது மட்டுமின்றி புதினா, துளசி, பெர்ரி பழங்கள் கொண்டும் ஜூஸ் தயாரித்து குடிக்கலாம்.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்கள் என்பது திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவை தான் சிட்ரஸ் பழங்கள் என்கிறோம். இந்த பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.
வெயிலில் அதிகமான நேரம் பயணம் செய்தால் மயக்கம் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த பிரச்னை அதிகமாக காணப்படும். இந்த பிரச்னை உள்ளவர்கள் திராட்சை அல்லது ஆரஞ்சு பலன்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
சர்பத்
வேலைக்கு செல்பவர்கள் அதிகமாக வெயிலில் அலைய வேண்டிய நிலை ஏற்படலாம். அலுவலங்களில் வேலை செய்பவர்களை தவிர, வெளியில் அலைந்து வியாபாரம் செய்பவர்கள் அதிகமான நேரங்களில் வெயிலில் சுற்ற வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, இவர்களுக்கு வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல், மயக்கம், தலை சுற்றல் போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம். இப்படிப்பட்ட நேரங்களில் சர்பத், பழரசம் போன்ற குழிப்பண்ணைகளை அருந்தினால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளித்து உடலை உற்சாகமாக வைக்க உதவுகிறது.