இஞ்சி மற்றும் கேரட்டை, ஜுஸ் தயாரித்து சாப்பிட்டால் புற்றுநோய் வராதாம்! எப்படி சாத்தியம்..?

Default Image

புற்றுநோய்- மிக கொடிய நோய், அதி பயங்கர நோய், மோசமான நோய் இப்படி பல விதங்களில் நாம் இதனை கண்டு அஞ்சுவதுண்டு. அதிக வீரியம் கொண்ட நோய்களின் பட்டியலில் புற்றுநோய் முதல் இடத்தில் உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம் வகை வகையான முறையில் இது உருவாவதே. நமது உடலில் பல்வேறு இடங்களிலும் இந்த புற்றுநோய் உருவாக கூடும்.

சுமார் 200-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகள் உள்ளதாக தற்போதைய ஆராய்ச்சி அறிவித்துள்ளது. இந்த கொடிய நோயை தடுக்க கூடிய ஆற்றல் இஞ்சி மற்றும் கேரட்டில் இருக்கிறதாம். எவ்வாறு இது சாத்தியப்படும் என்பதையும், மேலும் பல பயன்களையும் இந்த தொகுப்பில் அறிவோம்.

எதிர்ப்பு சக்தி
இஞ்சி மற்றும் கேரட்டை சேர்த்து சாப்பிடுவதால் விரைவிலே எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுவாக மாற்றி விடலாம். காரணம் இவற்றில் இருக்க கூடிய வைட்டமின் சி மற்றும் வைட்டமின் எ தான். வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய்களை அழிக்கும் ஆற்றல் இவற்றிற்கு உண்டு.

புற்றுநோய்
ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் சி இந்த ஜுஸில் நிறைந்து காணப்படுவதால் புற்றுநோய் அபாயத்தை குறைத்து விடுமாம். குறிப்பாக பெண்களுக்கு உருவாக கூடிய கருப்பை புற்றுநோயை இது தடுக்கும் ஆற்றல் பெற்றது.

தசை சோர்வும், தொற்றுகளும்
தசைகளில் சோர்வாக இருந்தாலோ வலியுடன் இருந்தாலோ அதற்கு இந்த ஜுஸ் நல்ல தீர்வை தரவல்லது. கூடுதலாக உடலில் தொற்றுகள் உண்டாகாதவாறு பார்த்து கொள்ளும்.

இதய பாதுகாப்பு
ரத்தத்தை சீரான அளவில் உடல் உறுப்புகளுக்கு அனுப்ப இந்த கேரட் இஞ்சி ஜுஸிற்கு தன்மை உள்ளது. இதனால் இதயம் ஆரோக்கியமாக வேலை செய்யும். மற்றும் உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட கூடிய வாய்ப்பும் மிக குறைவு.

கேரட் இஞ்சி ஜுஸ்
இந்த ஜுஸை தயாரித்து குடிக்க, இதனை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள் :
4 கேரட்
சிறிய துண்டு இஞ்சி
அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு

தயாரிப்பு முறை
கேரட்டை நீரில் அலசி கொண்டு தோலை உறித்தெடுத்து கொள்ளவும். பின் இதனை சிறிதாக அரிந்து இஞ்சியை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். கடைசியாக இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வரவும். தொடர்ந்து குடித்து வந்தால் மேற்சொன்ன நன்மைகள் உடலுக்கு வந்து சேரும்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்