குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் என்றால் அலாதி பிரியம். சாக்லேட் என்ற ஒற்றை வார்த்தைக்கு ஒரு பெரிய கூட்டமே கூடும். அதிக அளவில் செயற்கை சர்க்கரையை சேர்க்கும் சாக்லேட்கள் நமக்கு ஒரு போதும் நன்மை தராது.
கோக்கோ அதிக அளவில் உள்ள டார்க் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் பல்வேறு பயன்களை தரும். இந்த டார்க் சாக்லேட் என்ன விதமான பயன்களை தரும் என்பதை இனி அறியலாம்.
ஊட்டச்சத்துக்கள்
இந்த டார்க் சாக்லேட்டில் நார்சத்து, இரும்புசத்து, மெக்னீசியம், காப்பர், மங்கனீஸ், பொட்டாசியம், ஜின்க் போன்ற பலவித ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் நிறைந்துள்ளன. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெரும்.
இரத்த ஓட்டம்
நமது உடலில் எந்த அளவிற்கு இரத்த ஓட்டம் உள்ளதோ அதை பொருத்து தான் உடல் நலமும் கணிக்கப்படும். உறுப்புகளுக்கு சரியான அளவில் இரத்த ஓட்டம் செல்லவில்லை என்றால் பாதிப்பு அதிகரிக்கும். டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் எல்லா உறுப்புகளுக்கும் சீரான அளவில் இரத்த ஓட்டம் செல்லும்.
கொலஸ்ட்ரால்
டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் மிக விரைவிலே கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து விடலாம். உடலுக்கு நன்மை தர கூடிய நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கலாம். இதனால் நோய் நொடி இன்றி அதிக காலம் உயிர் வாழலாம்.
அழகான சருமம்
கோகோ அதிக அளவில்இருக்கும் டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் சருமம் அழகு பெரும். முகத்தில் உள்ள செல்கள் எப்போதுமே புத்துணர்வுடன் இருக்கும். நீங்கள் அதிக இளமையாக இருக்க டார்க் சாக்லேட் உதவும்.
மூளை திறன்
ஞாபக சக்தியை அதிகரித்து, சிறந்த திறனுடன் இருக்க டார்க் சாக்லேட் உதவுகிறது. வயதான காலத்தில் வர கூடிய ஞாபக மறதி நோயை தடுக்க இதனை சாப்பிட்டு வாருங்கள்.
இதய நோய்கள்
இரத்த நாளங்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் வைத்து கொள்ள டார்க் சாக்லேட் போதும். இதனால் இதய நோய்கள், மாரடைப்பு போன்ற அபாயங்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…