ஆப்பிள் டீ குடித்தால் வயிற்றில் உள்ள கொலஸ்ட்ரால் உடனே குறையும்…தயாரிக்கும் முறை எப்படி..?

Published by
Sulai

“தினமும் 1 ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே செல்ல வேண்டியதில்லை” இந்த வாசகத்தை பள்ளி பருவம் முதல் இன்று வரை நாம் கேட்டு வருகின்றோம். உண்மையில் இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபணம் ஆகியுள்ளது. தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் பலவித மாற்றங்களை நம் உடலில் கொண்டு வர இயலும்.

உதாரணமாக தொப்பை முதல் எதிர்ப்பு சக்தி குறைபாடு வரை, ஆப்பிளை வைத்து தீர்வு காணலாம். வெறும் ஆப்பிளை சாப்பிடுவதை விட அதனை டீயாக தயாரித்து குடித்தால் நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் அனைத்துமே முற்று பெற்று விடும். இனி ஆப்பிள் டீயின் நற்பயன்களை பற்றி அறியலாம்.

சர்க்கரை அளவு
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிக எளிதில் குறைக்க ஆப்பிள் டீ உதவுகிறது. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளதால் உடலுக்கு பல்வேறு பலன்களை கொடுக்கும். இதற்கு காரணம் ஆப்பிளில் இருக்கின்ற இயற்கையான சர்க்கரை தான். இது சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது.

செரிமானம்
அஜீரண கோளாறு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வை தருகிறது ஆப்பிள் டீ. நார்சத்து அதிக அளவில் ஆப்பிள் டீயில் உள்ளதால் செரிமான மண்டலத்தை எந்தவித பாதிப்பும் இல்லாமல் வைத்து கொள்ளும். ஆப்பிள் டீ மிக விரைவிலே செரிமானத்தை ஏற்படுத்தும்.

கொலஸ்ட்ரால்
உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க ஆப்பிள் டீ பயன்படுகிறது. குறிப்பாக இது வயிற்று பகுதியில் உள்ள கொலஸ்ட்ராலை வெளியேற்ற உதவுகிறது. எனவே தொடர்ந்து ஆப்பிள் டீ குடித்து வந்தால் தொப்பை பறந்து போய் விடும்.

எதிர்ப்பு சக்தி
நோய்கள் நமது உடலை தாக்க வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை தான் காரணம். இவற்றின் அளவு குறைந்தால் நமக்கு பலவித ஆபத்துகள் உண்டாகும். ஆப்பிள் டீ குடித்தால் எதிர்ப்பு சக்தி உயரும். இதனால் பல்வேறு நோய்களின் பாதிப்பில் இருந்து உடலை பாதுகாத்து கொள்ளலாம்.

டீ தயாரிக்க தேவையானவை
ஆப்பிள் டீயை தயாரிக்க சில பொருட்களை தயாராக வைத்து கொள்ளுங்கள்.
1 ஆப்பிள்
3 கப் நீர்
2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
2 டீ பேக்ஸ்
அரை ஸ்பூன் இலவங்க பொடி

தயாரிக்கும் முறை
ஆப்பிள் டீயை தயாரிக்க முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க விடவும். அடுத்து இதில் எலுமிச்சை சாறு, டீ பேக்ஸ் சேர்க்கவும். மிதமான சூட்டில் சில நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும். பின் நறுக்கிய ஆப்பிளை அதில் சேர்க்கவும்.

5 நிமிடம் லேசான சூட்டில் கொதிக்க வைத்து எடுத்து கொள்ளவும். இறுதியாக இதில் இலவங்க பொடி சேர்த்து நன்கு கலக்கி குடித்து வரலாம். இவ்வாறு தினமும் 1 கப் ஆப்பிள் டீ குடித்து வந்தால் பலவித பயன்கள் கிடைக்கும்.

Published by
Sulai

Recent Posts

சாதி மறுப்பு திருமணம்., இரட்டை கொலை! மரண தண்டனை கொடுத்தது ஏன்? வழக்கறிஞர் விளக்கம்!

கோவை : கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இரட்டை ஆணவ படுகொலை…

5 hours ago

கும்பமேளா கூட்ட நெரிசல் : 30 பேர் பலி., 4 பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்! உ.பி போலீசார் விளக்கம்!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கங்கை, யமுனை,…

6 hours ago

“ஆட்டோ கட்டணம் உயர்வு – எந்த முடிவும் எடுக்கவில்லை” – போக்குவரத்துத் துறை விளக்கம்!

சென்னை : பிப்ரவரி ஒன்று முதல் ஆட்டோ பயணக் கட்டணம் உயர்கிறது என்று ஒரு தகவல் வெளியானது. அதன்படி, ஆட்டோ…

7 hours ago

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் : அரைகுறை ஏற்பாடுகளே காரணம்! கொந்தளித்த காங்கிரஸ்!

அலகாபாத் : உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்த…

8 hours ago

இப்படியா விளையாடுவது? சூர்யகுமார் யாதவை விமர்சித்த மைக்கேல் வாகன்!

குஜராத் : டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 கிரிக்கெட் வீரர் என்று அழைக்கப்படும் கேப்டன் சூர்யகுமாரின் பேட்டிங் பார்ம் சமீபகாலமாக…

8 hours ago

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’… கவனம் ஈர்க்கும் டைட்டில் டீசர்.!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'SK25' திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக "பராசக்தி" என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும்…

8 hours ago