கோடைகாலம் தொடங்கியாச்சி! இனிமே இதை மட்டும் சாப்பிடுங்க!
கோடைக்காலம் தொடங்கினாலே மக்களுக்கு மனதில் பயம் எழுந்து விடும். ஏனென்றால், எந்த நேரத்தில் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவதில்லை. இதனால், கோடைகாலத்தில் மக்கள் எந்தெந்த பழங்களை சாப்பிடுவது என்றும் தெரிவதில்லை.
தற்போது இந்த பதிவில் கோடைகாலத்தில் நாம் என்னென்ன பழங்களை சாப்பிடுவது என்பது பற்றி பார்ப்போம்.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழம் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு பழம். இப்பழம் கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பழம் கோடை காலங்களில் ஏற்பாடாக் கூடிய செரிமான பிரச்னையை போக்குகிறது.
சாத்துக்குடி ஜூஸ்
கோடைகாலத்தில் நாம் அதிகமாக குளிர்பானங்களை தான் நாடுவதுண்டு. குளிர்பானங்கள் குடிப்பது நல்லது தான். அதிலும், செயற்கையான பானங்களை தவிர்த்து இயற்கையான பானங்களை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், சாத்துக்குடி ஜூஸ் கோடைகாலத்தில் அருந்துவதற்கு மிக சிறந்த பானமாகும்.
தர்பூசணி
தர்பூசணி பழம் கோடைகாலத்தில் உண்பதற்கு ஏற்ற பழம். இப்பழம் கோடையில் நமது உடலில் ஏற்படும் வறட்சியை, போக்கி வெப்பத்தை தனித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இளநீர்
கோடைகாலத்தில் நாம் அருந்துவதற்கான சிறந்த உணவுகளில் இளநீரும் ஒன்று. இது உடலில் உள்ள வெப்பத்தை தணித்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
பதநீர்
கோடைகாலத்தில் நாம் உண்ணும் உணவுகளில் பதநீர் ஒரு சிறந்த உணவாகும். இதனை குடிப்பதால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, கோடையில் ஏற்பாடாகி கூடிய நோய்களில் இருந்தும் நமது உடலை பாதுகாக்கிறது.