உங்க வீட்டை பார்த்தாலே எல்லாரும் வியந்து பார்ப்பாங்க, உங்கள் வீட்டுக்கு தேவையான சூப்பர் டிப்ஸ்
- உங்கள் வீட்டுக்கு தேவையான சூப்பர் டிப்ஸ்
நமது வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து இல்லத்தரசிகளின் ஆசையாக இருக்கும். ஆனால் எப்படி சுத்தமாக, அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் சிலருக்கு தெரிவதில்லை. அப்போது இல்லத்திற்கு உரித்தான சில குறிப்புகளை பற்றி பாப்போம்.
பால் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க
நம்மில் அதிகமானோர் பால் காய்ச்சும் போது, பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டியிருப்பதை காண்போம். அவ்வாறு ஒட்டாமல் இருக்க வேண்டுமென்றால், பால்காய்ச்சுவதற்கு முதலில் பாத்திரத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
கோதுமையில் பூச்சி வராமலிருக்க
நமது வீட்டில் நமக்கு தேவையான கோதுமை அல்லது கோதுமை மாவு வாங்கி வைத்திருப்போம். ஆனால், அது சில குறிப்பிட்ட நாளிலேயே பூச்சி வைத்து விடுகிறது. அவ்வாறு பூச்சி வைக்காமல் இருக்க வெந்தயக் கீரையை போட்டு வைத்தல் போச்சி வருவதில் இருந்து பாதுகாக்கலாம்.
பாத்திரத்தில் துர்நாற்றம் வீசாமல் இருக்க
நாம் அசைவ உணவுகளை சமைத்த பின், பாத்திரத்தில் துர்நாற்றம் வீசும். இந்த நாற்றம் வீசாமல் இருக்க பாத்திரத்தில் சிறிதளவு புளியை தடவி பிறகு வழக்கம் போல் க்ளீனிங் பவுடர் போட்டு கழுவினால் பாத்திரத்தில் மனம் வீசும்.
வெள்ளி ஆபரணங்கள் பளபளக்க
நாம் வெள்ளி ஆபரணங்களை வாங்கி ஒரு சில நாட்களிலேயே கருப்பாகி விடுகிறது. அப்படி கருப்பாவதை தடுக்க வெளி ஆபரணங்களுடன், சிறிய கற்பூரத்தை போட்டு வைத்தால் வெள்ளி ஆபரணங்கள் பளபளக்கும். .