இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே பருக்கள் தான். இந்த பருக்களை போக்குவதற்கு பல வழிகளில் மருத்துவங்களை மேற்கொண்டாலும், அதற்கான தீர்வு கிடைப்பதில்லை, மாறாக பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது.
முகத்தில் பருக்கள் அதிகம் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிமாக காணப்படும் எண்ணெய் பசை தான். சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதால், சருமத்துளைகள் அடைக்கப்பட்டு அதனால் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
முகத்தில் உள்ள பருக்களை போக்க சில வழிகள் :
வேப்பிலை :
தினமும் குளிக்கும் முன் வேப்பிலையை அரைத்து, அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகத்தில் உள்ள பருக்களை எளிதில் போக்கலாம்.
ஜாதிக்காய் :
ஜாதிக்காயை சிறிது நீர் சேர்த்து கல்லில் தேய்த்து வரும் பேஸ்ட்டை பருக்கள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்குவதோடு, அவை மீண்டும் உருவாகுவதை தடுக்கலாம்.
உடலை சரியாக பராமரித்தல் :
பருக்கள் முதலில் உடலினுள் தான் ஆரம்பமாகிறது. அதிலும் டாக்சின்கள் உடலில் அதிகம் இருந்தால், உடலினுள் பருக்கள் உருவாக ஆரம்பித்து, நாளடைவில் முகத்தில் தெரியும். எனவே தினமும் அதிகப்படியான அளவு நீரை குடித்து, உடலை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி பழங்கள் மாற்றம் காய்கறிகளையும் தவறாமல் அதிகம் உட்கொள்ள வேண்டும்.
உங்கள் முடியில் எண்ணெய் பசை அதிகம் இருப்பின், அதன் காரணமாகவும் பருக்கள் வரக்கூடும். எனவே வாரத்திற்கு 2 முறை தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். மேலும் உடல் எடையையும் சீராக பராமரித்து நல்ல தூக்கத்தையும் மேற்கொள்ளுங்கள்.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…